பள்ளி மாணவிக்கு ஹெச்.ஐ.வி. கலந்த ரத்தம் வழங்கியதாக, ரத்தம் செலுத்திய டாக்டர் மற்றும் ரத்த வங்கி மீது புகார் எழுந்துள்ளது.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையை சேர்ந்தவர் பள்ளி மாணவி கௌசல்யா தேவி. இவருக்கு கடந்த 2009ம் ஆண்டு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மதுரை புதூரில் தனியார் மருத்துவமனையில் ஒன்றில் சேர்க்கப்பட்டார்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் கண்ணப்பன், மாணவிக்கு ரத்தம் குறைவு ஏற்பட்டுள்ளதாக கூறி, அவருக்கு ரத்தம் செலுத்தினார். அதன்பின் மாணவிக்கு அடிக்கடி மயக்கம் ஏற்பட ஆரம்பித்தது.
இதையடுத்து, மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு மாணவியை பரிசோதித்த டாக்டர்கள் கௌசல்யாவிற்கு ரத்தத்தில் ஹெச்.ஐ.வி. கலந்துள்ளதாக தெரிவித்தனர்.
இதில் அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர், ரத்தம் வழங்கிய ரத்த வங்கி மீதும், ஹெச்.ஐ.வி. கலந்த ரத்தத்தை செலுத்திய டாக்டர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அஷ்ரா கார்க்கிடம் புகார் மனு அளித்தனர்.
இந்த புகார் மீது விசாரணை நடத்த போலீசாருக்கு மதுரை எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார். அப்பாவி மனித உயிர்களுடன் விளையாடும் இது போன்ற இரத்த வங்கிகள் மீதும், அலட்சிய டாக்டர்கள் மீதும் மருத்துவ கவுன்சிலும், மத்திய, மாநில அரசும் கடும் நடுவடிக்கை எடுத்து உரிய தண்டனை வங்கினால் மட்டுமே வரும் காலத்தில் இது போன்ற அபாயம் தடுக்கப்படும் என சமூக ஆர்வலர்கள் சிலர் கருத்து தெரிவித்தனர்.

No comments:
Post a Comment