நான் சட்டவிரோதமாக கிரானைட் தொழிலில் ஈடுபட்டுள்ளதாக சட்டசபையில் தொழில்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றம் சாட்டியுள்ளார். இது அபாணடமானது. இந்தப் புகாரை அவர் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர் மீது நான் வழக்கு தொடருவேன் என்று மத்திய ரசாயாணத்துறை அமைச்சர் மு.க.அழகிரி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
சட்டப்பேரவை கூட்டத்தொடரில் 17ம் தேதி அன்று தொழில்துறை மானிய கோரிக்கை விவாதத்தின்போது தமிழக தொழில்துறை அமைச்சர் வேலுமணி என்மீது அபாண்டமான குற்றச்சாட்டை வெளியிட்டுள்ளார்.
நான் மதுரையை சுற்றியுள்ள கிராமங்களை வளைத்து சில கூட்டாளிகளை சேர்த்து கிரானைட் தொழிலில் ஈடுபட்டதாகவும், அது தற்போது மூடப்பட்டு விட்டதாகவும் எந்தவித ஆதாரமும் இல்லாமல் பொய் குற்றச்சாட்டை என் மீது சுமத்தி உள்ளார்.
நான் எந்த காலத்திலும் கிரானைட் தொழிலில் ஈடுபட்டவன் அல்ல. வேலுமணி பொய் குற்றச்சாட்டுக்களை என்மீது சட்டப் பேரவையிலேயே சுமத்த துணிந்தார் என்றால், அவர் என்மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க வேண்டும். அல்லது அவரது பொய் குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்பு ஏற்க வேண்டும். இதை நான் சும்மா விட்டுவிடமாட்டேன்.
வேலுமணி மீது நீதிமன்றத்தில் நடவடிக்கை எடுப்பேன். மேலும் என் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் செயலில் சட்டப் பேரவையையே பயன்படுத்தி உள்ள வேலுமணி என் மீது சுமத்தி உள்ள குற்றச்சாட்டுக்களை நிரூபிக்கவேண்டும். நிரூபிக்கத் தவறினால் அவர் அமைச்சர் பதவி மட்டுமல்ல, எம்.எல்.ஏ. பதவியையும் ராஜினாமா செய்ய வேண்டும்.
என் மீது குற்றச்சாட்டுகளை சுமத்தி நான் வகிக்கும் பொறுப்புகளுக்கு அவமானம் ஏற்படுத்தும் வகையில் தமிழக சட்டப் பேரவையை தவறாக பயன்படுத்தியுள்ள வேலுமணியிடம் என் மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்களுகான ஆதாரங்களை பெற வேண்டும் என சட்டப் பேரவை தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளேன். அப்படி ஆதாரங்களை 15 நாட்களுக்குள் வேலுமணி வழங்கத் தவறினால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்று அழகிரி கூறியுள்ளார்.

No comments:
Post a Comment