தமிழக முன்னாள் ஆளுநர் பி.சி.அலெக்சாண்டர் உடல் நலக்குறைவால் இன்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மரணமடைந்தார்.
இந்திரா காந்தியின் தனிச் செயலாளராக பணியாற்றி வந்த பி.சி.அலெக்சாண்டர், இந்திரா மறைவுக்குப் பின்னர், பலரும் பிரதமர் பதவிக்கு முட்டி மோதிக் கொண்டிருந்தபோது ராஜீவ் காந்தியை பிரதமராக்க கடுமையாக பாடுபட்டவர்களில் முக்கியமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தமிழகத்தில் பெரும் அரசியல் சூறாவளி வீசிக் கொண்டிருந்த காலகட்டத்தில் தனது நம்பிக்கைக்குப் பாத்திரமான அலெக்சாண்டரை ராஜீவ் காந்தி தமிழக ஆளுநராக்கினார்.
பி.சி.அலெக்சாண்டர் சமீப காலமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து சென்னை முகப்பேரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்கைக அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்றுகாலை மரணமடைந்தார். அவருக்கு வயது 90 ஆகும்.
பதிஞ்சரெதலகல் செரியன் அலெக்சாண்டர் எனப்படும் பி.சி.அலெக்சாண்டர் மத்திய அரசுப் பணியில் இருந்து வந்தவர். பல்வேறு முக்கியப் பொறுப்புகளை இவர் வகித்துள்ளார்.
மத்திய வர்த்தகத்துறை, ஐ.நா. அவை உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார்.
இந்திரா காந்தியின் மறைவுக்குப் பின்னர் யார் அடுத்த பிரதமர் என்ற கேள்வி எழுந்தது. பிரணாப் முகர்ஜி உள்ளிட்டோர் பிரதமர் பதவியைப் பிடிக்க கடுமையாக முயன்று வந்தனர். ஆனால் அந்த சமயத்தில் ராஜீவ் காந்தியை பிரதமராக்க சிலர் தீவிர நடவடிக்கை எடுத்தனர். அவர்களில் ஒருவர் அலெக்சாண்டர். அதன் விளைவாக பிரணாப் முகர்ஜி உள்ளிட்டோரின் முயற்சிகள் தோற்று, ராஜீவ் காந்தி பிரதமரானார்.
எப்படி இந்திரா காந்தியின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக திகழ்ந்தாரோ அதேபோல ராஜீவ் காந்தியிடமும் நல்ல உறவை பேணிக் காத்தார் அலெக்சாண்டர்.
இதன் பயனாகத்தான் தமிழகத்தில் எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின்னர் பெரும் அரசியல் சூறாவளி வீசிக் கொண்டிருந்த காலகட்டத்தில், ராஜீவ் காந்தியால் தமிழக ஆளுநராகப் பணியமர்த்தப்பட்டார் அலெக்சாண்டர்.
தமிழக ஆளுநராக 1988ம் ஆண்டு முதல் 1990 வரை பணியாற்றினார் அலெக்சாண்டர். அசைக்க முடியாத முதல்வராக இருந்து வந்த எம்.ஜி.ஆர். மறைந்த பின்னர் ஆளுநர் குராணா மாற்றப்பட்டு அவருக்குப் பதில் அலெக்சாண்டர் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின்னர் அதிமுக பிளவுபட்டு ஜானகி அணி, ஜெயலலிதா அணி என இரண்டாக சிதறியது அதிமுக. இந்த நிலையில் ஆளுநராக இருந்து வந்த குராணா மாற்றப்பட்டார். தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. அதன் பின்னர் புதிய ஆளுநராக அலெக்சாண்டர் நியமிக்கப்பட்டார்.
இவர் ஆளுநராக நீடித்தவரை அதிமுக ஒன்றுபடவே இல்லை. பிரிந்த நிலையிலேயே 1989ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலைச் சந்தித்தது. திமுக வெற்றி பெற்று, மீண்டும் முதல் முறையாக ஆட்சிப் பொறுப்பை ஏற்றது. கருணாநிதி முதல்வரானார்.
அதன் பின்னர் 1993 முதல் 2002 வரை மகாராஷ்டிர ஆளுநராகவும் பணியாற்றினார். 1996 முதல் 98 வரை கோவா மாநில ஆளுநராகவும் கூடுதல் பொறுப்பு வகித்துள்ளார்.
கேரளாவைச் சேர்ந்த பி.சி.அலெக்சாண்டர், 2002 முதல் 2008 வரை மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து சுயேச்சையாக ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட்டு எம்.பியாகவும் பணியாற்றியுள்ளார்.
2007ல் நடந்த ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராகவும் பரிசீலிக்கப்பட்டவர் அலெச்சாண்டர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment