தமிழர் இனப்படுகொலை தொடர்பான போர்க்குற்றச்சாட்டுகள் சூழந்துள்ள நிலையிலும் இந்தியா தரும் அசாதாரண ஆதரவை மட்டுமே நம்பி இலங்கை அதிபர் ராஜபக்சே இன்று அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இன்று அதிகாலை தனி விமானமொன்றின் மூலம் ராஜபக்சேவும், பிரதிநிதிகளும் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
வரும் 23ம் தேதி நியூயார்க்கில் நடைபெறும் மாநாட்டில் ராஜபட்ச உரையாற்றுகிறார்.
மாநாட்டில் கலந்து கொள்ளும் பல நாட்டுத் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுடன் ராஜபக்சே பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்பு அவர் இங்கிலாந்துக்குச் சென்றபோது தமிழர்கள் பெரும் எதிர்ப்பு தெரிவித்தனர். போர்க்குற்றவாளி ஒருவரை இந்த நாட்டுக்குள் அனுமதிக்கலாமா என கேள்வி எழுப்பி, வழக்குத் தொடரவும் ஆயத்தமானதால், ராஜபக்சே திருப்பியனுப்பப்பட்டார்.
அதன் பிறகு அமெரிக்காவுக்கு செல்லும் வாய்ப்பு இருந்தும், தமிழர் எதிர்ப்பு, சர்வதேச போர்க்குற்ற நடைமுறை சட்டங்களுக்குப் பயந்து கொழும்பிலேயே இருந்தார்.
ஆனால், இந்த விஷயத்தில் இந்தியா ராஜபக்சேவுக்கு தனது முழுமையான ஆதரவை அளித்துவருகிறது. சீனா தம்மை முந்திக் கொண்டு விடுமோ என்ற பயத்தில் இந்த ஆதரவை வழங்குவதாக இந்தியா விளக்கமே அளித்தது கவனிக்கத்தக்கது.
இந்த ஆதரவு தந்த தைரியத்தில், இன்று ஐநா மாநாட்டில் உரையாற்றச் சென்றுள்ளார் ராஜபக்சே. ஆனாலும், அமெரிக்காவில் ராஜபக்சேவுக்கு தங்கள் எதிர்ப்பைக் காட்ட தயாராகி வருகின்றன தமிழர் அமைப்புகள்.
No comments:
Post a Comment