விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் மாமியார் மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு ஏராளமான தமிழர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
இலங்கையில் நடந்த இறுதிப்போருக்கு பின்னர் பிரபாகரனின் தந்தை வேலுபிள்ளை, தாயார் பார்வதி அம்மாள் இருவரும் தமிழ் அகதிகள் முகாமில் தங்கியிருந்தபோது சிங்கள ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டனர்.
ராணுவ காவலில் வைக்கப்பட்டிருந்தபோதே வேலுபிள்ளை மரணம் அடைந்தார். அதன்பிறகு பார்வதி அம்மாள் விடுதலை செய்யப்பட்டார். பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டிருந்த அவர் யாழ்ப்பாணம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
சிகிச்சை பலனிக்காமல் அவர் இறந்தார். சொந்த ஊரிலேயே அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில் பிரபாகரனின் மாமியாரும், பிரபாகரனின் மனைவி மதிவதனியின் தாயாருமான ஏரம்பு சின்னம்மா சமீப காலமாகா நோய்வாய்ப்பட்டிருந்தார்.
கடந்த வாரம் இவர் மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு ஏராளமான தமிழர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.
சரவணையைப் பிறப்பிடமாகவும், புங்குடு தீவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அவரின் உடல் சொந்த ஊரிலேயே அடக்கம் செய்யப்பட்டது.
No comments:
Post a Comment