கர்நாடக மாநிலம் சந்திரமா லேஅவுட்டை சேர்ந்தவர் காமேஸ்வரராவ். இவரது மகன் ராமமூர்த்தி(வயது 39). இவர் பெங்களூரில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் என்ஜீனியராக பணிபுரிந்து வருகிறார். இவர் திருப்பூர் மாவட்ட எஸ்.பியை சந்தித்து புகார் மனு அளித்தார்.அதில் அவர் கூறியிருப்பதாவது:-
நான் பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் என்ஜீனியராக வேலை பார்த்து வருகிறேன். நல்ல சம்பளத்தில் வேலை பார்த்து வருவதால் நண்பர்கள் வட்டாரம் அதிகமாக எனக்கு உள்ளது. அதுமட்டுமின்றி கம்ப்யூட்டர் மூலமும் எனக்கு நண்பர்கள் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த 8 வருடங்களாக திருப்பூரைச் சேர்ந்த இந்துமதி என்பவருடன் எனக்கு நட்பு ஏற்பட்டது. நாங்கள் இருவரும் கம்ப்யூட்டரில் சாட்டிங் மூலம் தினமும் மதியம் பேசிக்கொள்வோம். திடீரென்று ஒரு நாள் என்னிடம் தனக்கு பணக்கஷ்டம் உள்ளதாகவும், அதற்காக பண உதவி வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அதன்படி நானும் அவருக்கு ஏ.டி.எம். மூலமாக பண உதவி செய்து வந்தேன்.
இதுவரை சுமார் 15 லட்சம் ரூபாய் வரை கொடுத்துள்ளேன். அனால் அவர் யார்? எப்படி இருப்பார்? என்று எனக்கு தெரியாது. சாட்டிங் மூலமே எங்களுடைய நட்பு வளர்ந்தது. ஒரு கட்டத்தில் அவரைப் பற்றி தெரிந்து கொள்ள ஆசைப்பட்ட நான் அவருடைய புகைப்படத்தை எனக்கு இமெயிலில் அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொண்டேன்.
அவரும் எனக்கு ஒரு புகைப்படத்தை அனுப்பி வைத்தார். அதில் அழகான பெண் ஒருவரின் புகைப்படம் இருந்தது. அது இந்துமதி என நான் நம்பினேன். அவரை சந்திக்க ஆசைப்பட்டேன். அவருடன் இதுகுறித்து நான் பேசினேன். அதுவரை நன்றாக பேசிக்கொண்டு இருந்த அவர் அதன்பிறகு என்னுடன் தொடர்பு கொள்வதை நிறுத்திக்கொண்டார். நானாக தொடர்பு கொள்ள முயற்சித்தாலும் என்னை அவர் கண்டுகொள்ளவில்லை.
இது எனக்கு சந்தேகமாக உள்ளது. என்னிடம் ரூ.15 லட்சம் வரை பணத்தை மோசடியாக பெற்றுக்கொண்டனர். இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுத்து என் பணத்தை மீட்டு தரவேண்டும். இவ்வாறு அவர் அதில் கூறியிருந்தார்.
திருப்பூர் ரூரல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமாரை இதுகுறித்து விசாரிக்க போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார். விசாரணையின் போது அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியானது.
பெங்களூர் என்ஜீனியர் ராமமூர்த்தியுடன் கடந்த 8 வருடமாக இந்து மதி என்ற பெயரில் சாட்டிங் செய்து வந்தது பெண் அல்ல என்பதும் முதலிபாளையத்தை சேர்ந்த நாகராஜன்தான் (வயது 35) சாட்டிங் செய்திருந்ததும் தெரியவந்தது. இவர் திருப்பூரில் ரெடிமேடு கடை ஒன்றில் சேல்ஸ் மேனாக பணிபுரிந்து வருகிறார்.
கம்ப்யூட்டரில் எதேச்சையாக சாட்டிங் செய்த போது என்ஜீனியர் ராமமூர்த்தியின் பயோடேட்டாவை கம்ப்யூட்டரில் பார்த்துள்ளார். அவரிடம் பணம் நிறைய உள்ளதை அறிந்துகொண்ட நாகராஜன் பெண் பெயரை பயன்படுத்தி சாட்டிங் செய்து நட்பு கொண்டுள்ளார். அவரைப்பற்றி முழுவதும் தெரிந்து கொண்ட பின்னர் அவரிடம் பணம் பறிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளார்.
இப்படி சுமார் 15 லட்சம் வரை மோசடி செய்து பணம் பறித்துள்ளது தெரிய வந்துள்ளது. இதைத் தொடர்ந்து திருப்பூர் ரூரல் போலீசார் நாகராஜனை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் நாகராஜன் இதுபோல் வேறு யாரிடமாவது மோசடி செய்துள்ளாரா? எனவும் விசாரித்து வருகின்றனர்.
ராம்மூர்த்தி மூளையை எங்காவது அடகு வைத்திருந்தாரா? முன்பின் தெரியாத ஒரு நபருக்கு 15 லட்சம் பணம் கொடுப்பவர் உண்மையிலேயே பணத்தைப் பற்றிக் கவலைப் படாதவராக இருக்கவேண்டும்.
ReplyDelete