தூத்துக்குடி-கொழும்பு இடையே பயணிகள்கப்பல் போக்குவரத்து தொடங்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. அதனடிப்படையில் தூத்துக்குடி -இலங்கை இடையே கப்பல் போக்குவரத்தை தொடங்க மத்திய கப்பல் போக்குவரத்து துறை நடவடிக்கை எடுத்தது.
அதன்படி கடந்தஆண்டு (2011) ஜூன் மாதம் தூத்துக்குடி -கொழும்பு இடையே கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டது. 1240பேர் பயணிக்கக்கூடிய வகையில் தனியாருக்கு சொந்தமான பிரமாண்ட கப்பல் இயக்கப்பட்டது. ஆனால் அந்த கப்பலில் மிகக்குறைந்த அளவே பயணிகள் பயணித்ததால், கப்பலை இயக்கிய தனியார் நிறுவனம் நஷ்டத்தை சந்தித்தது. இதனால் அந்த நிறுவனம் தூத்துக்குடி-கொழும்பு இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்தை நிறுத்தியது.
அந்த கப்பலை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. அதன்படி தூத்துக்குடி-கொழும்பு இடையே வருகிற 19-ந்தேதி முதல் மீண்டும் பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படுகிறது.
இதுகுறித்து தூத்துக்குடி துறைமுக பொறுப்புகழக தலைவர் சுப்பையா நிருபர்களிடம் இன்று கூறியதாவது:-
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் கடந்தஆண்டு 25.7மில்லியன் டன் சரக்கு கையாளப்பட்டது. அது இந்தஆண்டு 28.01சதவீதமாக அதிகரித்து உள்ளது. சரக்கு கையாளும் திறனில் 10சதவீதம் அதிகரித்து தூத்துக்குடி துறைமுகம் சாதனை படைத்துள்ளது. தூத்துக்குடி- கொழும்பு இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து வருகிற 19-ந்தேதி(வியாழக்கிழமை) முதல் மீண்டும் இயக்கப்படுகிறது. இதற்கு முன் 1240 பேர் பயணிக்கும் பெரிய கப்பல் இயக்கப்பட்டது. ஆனால் தற்போது 450பேர் பயணம் செய்யக்கூடிய சிறியவகை கப்பல் இயக்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment