கரூர் அருகே விதவைப் பெண்ணிடம் ரூ. 1 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்ததாக திமுக செயலாளர் சாமிநாதன் மீது புகார் எழுந்துள்ளது.
கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அருகே உள்ளது புஞ்சை புகளூர் வடக்கு கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் நல்லப்பன் (லேட்) மனைவி சோலியம்மாள்.
அவர் கரூர் மாவட்ட நில அபகரிப்பு பிரிவில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது,
நான், எனது மகள் சித்ரா மற்றும் மகன் அசோக்குமாருடன் வேலாயுதம்பாளையம் அருகே உள்ள புஞ்சை புகளூர் வடக்கு கிராமத்தில் வசித்து வருகின்றேன்.
எனது கணவர் இறந்து போனதால் குடும்பம் நடத்த மிகவும் கஷ்டப்பட்டேன். இதனால் சிலரிடம் கடன் வாங்கினேன்.
எனக்கு சொந்தான நிலம் புஞ்சை புகளூர் பஸ் நிறுத்தம் அருகே உள்ளது. ரூ. 1 கோடி மதிப்புள்ள இந்த நிலத்தை விற்று கடனை அடைக்க முடிவு செய்தேன். இதையடுத்து அப்பகுதி திமுக நகரச் செயலாளர் சாமிநாதனுக்கு நிலத்தை விற்க பவர் அளித்தேன்.
அந்த இடத்திற்காக சாமிநாதன் எனக்கு ரூ. 15 லட்சம் மட்டும் தான் கொடுத்தார். அந்த நிலத்தை அவர் மகள் ரேவதி பெயருக்கு மாற்றி அபகரித்துக் கொண்டார். எனவே, என்னை மோசடி செய்த சாமிநாதன் மீது நடவடிக்கை எடுத்து நிலத்தை மீட்டுத் தருமாறு கோட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அந்த மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த புகார் மீது நில அபகரி்ப்பு பிரி்வு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:
Post a Comment