உள்ளாட்சித் தேர்தலில் மதிமுக போட்டியிட முடிவு செய்துள்ளது.
கடந்த சட்டமன்ற தேர்தலின்போது அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்த ம.தி.மு.க., அந்தக் கூட்டணியில் உரிய மரியைதை கிடைக்காத காரணத்தால் புறக்கணித்தது. தனித்தும் வேட்பாளர்களையும் நிறுத்தவில்லை.
இந்த நிலையில் வருகிற உள்ளாட்சி மன்ற தேர்தலில் ம.தி.மு.க. என்ன நிலை எடுக்கும் என பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டது.
நேற்று முன்தினம் ம.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை எழும்பூரில் உள்ள தாயகத்தில் நடந்தது.
இதில் உள்ளாட்சி தேர்தல் பற்றி பேசப்பட்டது. நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் பலரும் உள்ளாட்சி தேர்தலில் ம.தி.மு.க. போட்டியிட வேண்டும் என்று வற்புறுத்தி பேசினர். தேர்தலை புறக்கணித்தால் தொண்டர்கள் சோர்வடைந்து விடுவர் என்றும் சுட்டிக்காட்டினர். அதோடு வருங்காலத்தில் கட்சி வளர்ச்சி பாதிக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.
இதையடுத்து உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வைகோ முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை உள்ளாட்சி மன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் வைகோ வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பிட்ட கட்சியுடன்தான் கூட்டணி என்ற நிலைப்பாட்டை அக்கட்சி இன்னும் எடுக்கவில்லை.
அந்தந்தப் பகுதியில் உள்ள சூழ்நிலை மற்றும் வெற்றி வாய்ப்புக்கு ஏற்ப கூட்டணி அமைத்துக் கொள்ள மாவட்ட நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்படும் என்று தெரிகிறது..

No comments:
Post a Comment