ஆயிரம்தான் இருந்தாலும் அன்பான மனைவி போல வருமா! என்ற எண்ணம் கொண்ட கணவன்மார்கள் எவ்வளவோ பேர் இருக்க. அவசரத்துக்கும் ஆத்திரத்துக்கும், உல்லாசமாக இருக்க சில தடம்மாறிய நபர்கள் வாடகை மனைவிகளை தேடி செல்கின்றனர். அழையா விருந்தாளியாக எய்ட்சை வாங்கி வருகின்றனர்.
இத்தகைய வாடகை மனைவி கலாசாரம் கோவையில் பெருகி வரும் அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. குறிப்பாக கோவை மாநகரில் செல்வபுரம், பீளமேடு உள்ளிட்ட பகுதிகளில் இதற்கென்று தனி புரோக்கர்கள் வலம் வருகின்றனர். இத்தகைய புரோக்கர்கள் தங்களிடம் உல்லாசத்தை தேடி வரும் ஆசாமிகளின் செல்போன் நம்பர்களை வைத்துக் கொண்டு வெளி மாநிலங்களில் இருந்து அழகிகள் அழைத்து வந்து விருந்து வைக்கின்றனர்.
அழகிகளுக்கு ஒரு நாளைக்கு ரூ.2500 வீதம் வழங்கப்படுகிறது. இவர் களை புறநகர் பகுதியில் உள்ள தனி பங்களாக்களில் தங்குவதற்கு ஏற்பாடு செய்கின்றனர். கணவன்- மனைவி போல போய் தங்கி தேவைகளை முடித்து விட்டு நல்ல பிள்ளைகளாய் அதிகாலை வேளையில் திருட்டு கோழிகள் பறந்து விடுகிறது.
புரோக்கருக்கு தனி கமிஷன், தங்கும் வீட்டுக்கு வாடகை தனி மற்றப்படி காலை, மதியம், இரவு சாப்பாடு (சைவம், அசைவம்), மது, சிகரெட் என என்ன வசதி வேண்டுமேமா அனைத்தையும் நேரத்துக்கு அழைப்பு மணி அடித்து கொடுத்து போக “அல்லக்கை” ஆசாமி ஒருவன் என அனைத்தும் புரோக்கர்களின் ஏற்பாடு. இத்தகைய வாடகை மனைவி கும்பல்கள் மூலம்தான் கோவையில் இளைஞர்களும், கல்லூரி மாணவர்களும், குடும்பஸ்தர்களும் சீரழிந்து வருவதாக போலீஸ் கமிஷனர் அமரேஷ் புஜாரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அவரது உத்தரவின் பேரில் செல்வபுரம் இன்ஸ்பெக்டர் ராஜன் சிறப்பு படை அமைத்து கண்காணித்து வந்தார். இன்று காலை செல்வபுரம் பஸ் நிலையத்தில் சந்தேகத்துக்கிடமான வகையில் சுற்றி திரிந்த 2 பெண்களை பிடித்து பெண் போலீஸ் உதவியுடன் விசாரித்தார். அவர்கள் 2 பேரும் வாடகை மனைவிகளாக செல்லும் அழகிகள், அமுதா, உஷா என்பதும் அவர்களை ஜெயக்குமார் என்ற புரோக்கர் அழைத்து வந்துள்ளதும், அவர்கள் காரில் வரும் வாடிக்கையாளர்களுக்காக காத்திருப்பதும் தெரியவந்தது.
உடனடியாக அழகிகள் 2 பேரையும் புரோக்கர் ஜெயக்குமாரையும் கைது செய்தனர். போலீஸ் விசாரணையில் ஒரு நாளைக்கு ரூ.2500 வாடகை பேசி அழகிகளை வாடகை மனைவிகளாக அனுப்பி வந்தது தெரிய வந்தது. தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி மருத்துவ பரிசோதனை செய்து ஜெயிலில் அடைக்கப்பட்டனர். வாடகை மனைவி கலாசாரத்தை ஒழிக்க போலீஸ் கமிஷனர் அமரேஷ் புஜாரி எடுத்து வரும் முயற்சிகளுக்கு பெண்கள் அமைப்பினர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment