இந்தோனேஷியாவில் ஏஸ் மாநிலத்தில் மட்டும் தான் இஸ்லாமிய சட்டம் நடைமுறையில் இருக்கிறது. அந்த மாநிலத்தில் 2 பெண்கள் ஒரே அறையில் தங்கி இருந்தனர். அவர்களில் ஆண் போல தோற்றம் உள்ள ஒருவர் பெண் ஆவார். அவர் பெயர் ரோகானி அவரது செல்லப்பெயர். ரான்டோ.
இந்த ரான்டோ என்ற பெயர் பொதுவாக ஆண்களுக்கு வைக்கப்படும் பெயர் ஆகும். தோற்றமும் பெயரும் ஆண் மாதிரி இருந்ததால் அவர் ஆண் என்று ஊரார் முடிவு செய்து விட்டனர். ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து ஒரு அறையில் வசிப்பது தவறு என்று தீர்மானித்த ஊரார், அவர்கள் இருவருக்கும் கட்டாயமாக திருமணம் செய்து வைத்தனர்.
திருமணத்துக்கு பிறகு தான் அவர்கள் இருவரும் பெண்கள் என்ற உண்மை உலகத்துக்கு தெரியவந்தது. இதை தொடர்ந்து பெண்ணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்வதற்கு இஸ்லாமிய சட்டத்தில் இடம் இல்லை என்பதால் அவர்கள் கைது செய்யப்பட்டனர். அந்த சட்டப்படி ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டவர்கள் தலை துண்டிக்கப்பட வேண்டும். அல்லது கடலில் தூக்கி வீசப் பட வேண்டும்.
இதில் அவர்கள் மீது குற்றம் ஏதும் இல்லை என்பதால் அவர்களுக்கு தண்டனை விதிக்கப்படவில்லை. அவர்களை எப்படி பிரிப்பது என்பது குறித்து போலீசாரும், மதத் தலைவர்களும் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
No comments:
Post a Comment