மாணவ, மாணவியர் 16ம் தேதி முதல் சமச்சீர் கல்விப் பாடப் புத்தகத்துடன்தான் பள்ளிக்கு வர வேண்டும். அன்று முதல் சமச்சீர் கல்வி பாடம் நடத்தப்படும் என்று மாநில பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் சமச்சீர் கல்விப் புத்தகங்களில் 41 இடங்களில் கருப்பு மை போட்டும், ஸ்டிக்கர் ஒட்டியும் மறைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு புத்தகத்தில் திமுக அரசின் சாதனைகள் என்ற பகுதி இடம் பெற்றிருக்கிறது. அதையும் அழிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
உச்சநீதிமன் உத்தரவுப்படி தமிழகத்தில் 1 முதல் 10ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வித் திட்டம் அமல்படுத்தப்படுகிறது. இதையடுத்து மாணவ, மாணவியருக்கு புத்தகங்களை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மின்னல் வேகத்தில் புத்தகங்களை விநியோகிக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
நேற்று முன்தினம் இப்பணி தொடங்கியது. தொடர்ந்து பள்ளிகளுக்கு புத்தகங்கள் வேகமாக அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களுடன் சேர்ந்து அரசு கிட்டங்கிகளுக்குச் சென்று தங்களுக்குத் தேவையான புத்தகங்களை வேன்கள், மினி லாரிகள் மூலம் பெற்றுச் சென்றனர்.
புத்தகங்களில் சில நீக்கங்களை அரசு அறிவித்துள்ளது. அவற்றை 14ம் தேதிக்குள் செய்ய வேண்டும். அதன் பின்னர் 15ம் தேதிக்குள் புத்தகங்களை மாணவர்களிடம் வழங்க வேண்டும். 16ம் தேதி முதல் இந்த புத்தகங்களை வைத்துப் பாடம் நடத்த வேண்டும் என்று கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
கருணாநிதி கவிதை-சென்னை சங்கத்திற்கு கருப்பு ஸ்டிக்கர்
சமச்சீர் பாடத் திட்ட புத்தகங்களில் முன்னாள் முதல்வர் கருணாநிதி எழுதிய கவிதைகள், கனிமொழி நடத்திய சென்னை சங்கமம், புதிய தலைமைச் செயலகம், செம்மொழி தமிழ் மாநாடு உள்ளிட்டவை குறித்து பாடத்துடன் சேர்த்து வைத்துள்ளனர். இவற்றையெல்லாம் நீக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இவற்றை நீக்கிய பின்னரே மாணவர்களுக்கு புத்தகங்களை வழங்க வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி மொத்தம் 41 இடங்களில் கருப்பு ஸ்டிக்கர்களை ஒட்டியும், கருப்பு மை தடவியும் அவற்றை மறைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
2-வது வகுப்பு தமிழ் பாடபுத்தகம் 5-ம் பக்கத்தில் உள்ள கருணாநிதி எழுதிய செம்மொழி வாழ்த்து, 73-ம் பக்கத்தில் உள்ள செம்மொழி மாநாட்டு காட்சிகள் தமிழாய்வு மத்திய நிறுவனம் பகுதி ஆகியவற்றை ஸ்டிக்கர் ஒட்டி மறைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அது போன்று அனைத்து வகுப்புகளிலும் உள்ள செம்மொழி வாழ்த்து பகுதி நீக்கப்படுகிறது. 9-வது வகுப்பு தமிழ்ப் பாட புத்தகத்தில் தமிழ் புத்தாண்டின் தொடர்கதை தொடரை நீக்கவும், 10-வது வகுப்பு தமிழ் பாடத்தில் 89-ம் பக்கத்தில் உள்ள கருணாநிதி எழுதிய கவிதை, 10-வது வகுப்பு தமிழ் புத்தகத்தில் 239-வது பக்கத்தில் உள்ள செம்மொழி தமிழாய்வு நடுவர் நிறுவனத்தின் பாவேந்தர் செம்மொழி தமிழாய்வு நூலகம், சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் இயங்கி வருகிறது என்ற வாசகம் ஆகியவற்றை கருப்பு மை போட்டு அழிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
10-வது வகுப்பு தமிழ் புத்தகத்தில் 100-வது பக்கத்தில் “கலைஞரின் இனிய நடை படித்தறிக கொடிநாள்” என்ற பகுதி, 4-வது வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் 111-வது பக்கத்தில் சென்னை சங்கமம் தொடர்பான தகவல்கள், 5-வது வகுப்பு சமூக அறிவியல் 80-வது பக்கத்தில் புதிய தலைமை செயலகம் கட்டிடம் படம் ஆகியவற்றை மறைக்க உ,த்தரவிடப்பட்டுள்ளது.
அதே புத்தகத்தில் 86-வது பக்கத்தில் கலைஞர் காப்பீடு திட்டம் என்ற தொடரை அழிக்க வேண்டும். மேலும், அதே புத்தகத்தில் 114-வது பக்கத்தில் புதிய தலைமை செயலகம்-2010 மார்ச் மாதம் 13-ந் தேதி முதல் ஓமந்தூரார் தோட்டத்தில் இயங்கி வருகிறது என்ற பகுதியை அழிக்க வேண்டும்.
10ம் வகுப்பு புத்தகத்தில் திமுக அரசின் சாதனைகள்!
10-வது வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் 111-வது பக்கத்தில் தி.மு.க. அரசின் சாதனைகள் குறித்த பகுதியை நீக்க வேண்டும். அதே புத்தகத்தில் 112-வது பக்கத்தில் திராவிட முன்னேற்ற கழகம் என்ற சொல் நிரந்தர கருப்பு மையால் அழிக்கப்பட வேண்டும்.
அதே புத்தகத்தில் 277-வது பக்கத்தில் தமிழக அரசின் அவசர கால சேவை 108 என்ற பகுதியை மறைக்க வேண்டும். மேற்கண்டவை உள்ளிட்ட 41 பகுதிகள் சமச்சீர் பாட புத்தகத்தில் இருந்து நீக்கப்படுகிறது.
இத்தனை திருத்தங்களையும் செய்த பின்னர் மாணவ, மாணவியருக்கு புத்தகங்களை பள்ளிகள் வழங்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
நான்
இப்படி 41 பக்கங்கள் ஸ்டிக்கர் ஒட்டி மறைக்க படுவதை எதிர்த்து வழக்கு தொடர்ந்தாங்கன்னா நல்ல இருக்கும்! இந்த ஆண்டின் மீதமுள்ள நாட்களும் மாணவர்களுக்கு புத்தகங்கள் இல்லாமலே சமாளிச்சிடலாம்! ஆனா, மாணவர்கள் பயப்பட வேணாம். ஏன்னா 'ஆல் பாஸ்' ஆக்கிடுவாங்க , அப்போ தானே மக்கள் கிட்ட இருந்து எதிர்ப்பு வராது. அது எப்படின்னா இப்போ புத்தகங்கள் இல்லாம வகுப்புகள் நடைபெறல்லையா!, புத்தகம் கொடுக்காமலே தேர்வுகள் நடத்த அரசு உர்த்தரவு போடல்லையா!! அப்படி தான் இதுவும்!!!

எனக்கு கொஞ்ச நாளாவே ஒரு சந்தேகமுங்க! ஒரு பள்ளியில் ஆசிரியர்கள் இல்லாம ஒரு மதம் வரை மாணவர்கள் மட்டும் போய் போய்டு வந்தாங்கன்னா பெற்றோர்கள் சும்மா இருப்பாங்களா? ஊடகங்கள் தான் சும்மா விடுவாங்களா? எங்க பிள்ளைங்களுக்கு படிப்பு கேட்டு போகுது, கட்டிடம் மட்டும் தான் இருக்கு ஆசிரியர்கள் இல்லாமல் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது!, அரசு நிர்வாகம் செயலிழந்து விட்டது இப்படி, தாம் தூம் நு குதிசிருபான்களே! இப்போ 70 நாள் பள்ளி கட்டிடங்கள் இருக்கு! ஆசிரியர்களும் வாராங்க, வந்து பாடம் சொல்லி கொடுக்க புத்தகங்கள் இல்லாம ஊர்கதை, குடும்ப கதை பேசிட்டு போறாங்க இது தமிழகத்தின் ஒரு பள்ளியில் நடந்தவை அல்ல தமிழகத்தின் ஒட்டு மொத்த பள்ளியிலும் இதே நிலைமை தான் ஆனா? ஒட்டு மொத்த தமிழக மக்களும் கண்டுகொள்ளவே இல்லையே ஏன்? சுட்டிகாட்ட வேண்டிய ஊடகத்துறையும் கண்டு கொள்ள வில்லையே ஏன்? தட்டிகேட்க வேண்டிய எதிர்கட்சியும் ஆளும் கட்சிக்கு சால்ரா போட்டிசே ஏன்? தங்கள் எதிர்காலத்துக்காக போராட வேண்டிய மாணவர்களும் அடங்கி போனது ஏன்?.... ஏன்?..... ஏன்.... ? இப்போ என்னனா 41 பக்கங்கள் ஸ்டிக்கர் ஒட்டி மறைக்க படுகிறது என்றால் மீதம் எத்தனை பக்கங்கள் இருக்கும்? மறைக்கப்படும் பாடங்களுக்கு மாற்று பாடங்கள் உண்டா? அல்லது இருகிறத படிச்சு எழுதுங்கப்பா நு அடட்சியமா இருக்க போறாங்களா? இதையெல்லாம் கேட்க்க ஆளே இல்லையா? என்ன கொடுமை சார் இது......!!!

No comments:
Post a Comment