மத்திய அரசை பகைத்துக் கொள்வது, தோலோடு பலாப்பழத்தை தின்பது மாதிரி. அதுவும் கருப்புப்பணம் புழங்கும் ஏரியாவில் கொஞ்சம் ஜாக்கிரதையாகவே இருப்பார்கள். (எல்லாம் இன்கம்டாக்ஸ் பயம்) இது பொதுவான விதி என்றாலும் மத்திய அரசுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும் அன்னாஹசாரேவுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள் வடக்கத்திய நடிகர்கள். கொஞ்சம் கொஞ்சமாக பரவிய இந்த எழுச்சி, மருத்துவமனையில் படுத்துக்கிடக்கும் நோயாளிகள் வரைக்கும் தொடர்கிறது என்றால் ஆச்சர்யம்தான்.
சற்று லேட்டாக விழித்துக் கொண்ட கோடம்பாக்க சினிமாக்காரர்கள் திடீரென்று தங்கள் அடையாள உண்ணாவிரதத்தை அறிவித்து இன்று பிலிம்சேம்பர் வளாகத்தில் நடத்தியும் காட்டி வருகிறார்கள். இதில் தமிழ் திரையுலகத்தின் முன்னணி நட்சத்திரங்கள் ஒன்று சேர்ந்து திரண்டு நிற்பார்கள் என்று நினைத்திருந்தால் அங்குதான் பிரச்சனை. சேரன், பார்த்திபன், ஏ.ஆர்.முருகதாஸ், ரோஹினி இவர்களை தவிர மக்களை ஈர்க்கும் முகங்கள் எதுவும் இல்லை அங்கே.
தமிழ் திரையுலகின் எல்லா பிரிவினருடனும் கலந்து பேசி ஒரு முடிவு எடுத்த பின், இந்த உண்ணாவிரதத்தை மிகப்பெரிய அளவில் நடத்தியிருக்கலாம். இவ்வளவு அவசரமாக நடத்த வேண்டிய தேவையில்லை. எனவே, எனக்கு அந்த உண்ணாவிரதத்தில் உடன்பாடு இல்லை. அதில் நான் கலந்து கொள்ளவும் மாட்டேன்'', என்று கூறிவிட்டார் தயாரிப்பாளர் சங்கத்தின் பொறுப்பு தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகர்.
ஏன் நிறைய பேர் வரல என்று சேரனிடம் கேட்டபோது, இதை போய் வராதவங்ககிட்ட கேளுங்க என்றார் ஆவேசமாக.
No comments:
Post a Comment