திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே தேமுதிகவினர் இடையே ஏற்பட்ட பெரும் கோஷ்டி மோதலில், அவர்களது கட்சித் தலைவர் விஜயகாந்த்தின் பேனரையே கிழித்து விட்டனர்.
பள்ளிப்பட்டு ஒன்றியம், ஆர்.கே. பேட்டை, தேமுதிக ஒன்றிய செயலாளராக இருப்பவர் ஏவி. தென்னரசு. இவர் மாவட்ட செயலாளர் அருண் சுப்பிரமணி எம்எல்ஏ ஒப்புதலின் பேரில் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்பு இந்த பொறுப்பில் கணபதி என்பவர் இருந்து வந்தார்.
இந்நிலையில் விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு ஆர்.கே. பேட்டை பஜாரில் விஜயகாந்தை வாழ்த்தி ஒன்றிய செயலாளர் தென்னரசு உள்பட கட்சியினர் பேனர் வைத்துள்ளனர்.
இதில் கணபதி சார்பில் வைத்துள்ள பேனரில் ஒன்றிய செயலாளர் கணபதி என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை பார்த்ததும் தென்னரசு கோஷ்டியினர் ஆத்திரம் அடைந்தனர்.
கணபதி வைத்திருந்த பேனரை இன்று அகற்ற முயன்றனர். இதற்கு கணபதி கோஷ்டியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இருதரப்பினருக்கு வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டது. இதில் கணபதி வைத்திருந்த பேனர் கிழிக்கப்பட்டது.
அந்த பேனரில் விஜயகாந்த்தின் படம்தான் பிரதானமாக இருந்தது. அந்தப் படத்தையே கிழித்ததால் தேமுதிகவினரே அதிர்ச்சி அடைந்தனர். பரபரப்பும் ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார் விரைந்து வந்து இருதரப்பினரையும் சமாதானப்படுத்திக் கலைந்து போகச் செய்தனர்.

No comments:
Post a Comment