சென்னை அசோக் நகரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி பழனியப்பன் சென்னை புறநகர் போலீஸ் கமிஷனரிடம் நடிகர் வடிவேலு மீது புகார் அளித்தார். இரும்புலியூர் பகுதியில் ரூ.20 லட்சத்துக்கு ஏலத்தில் எடுத்த நிலத்தை போலி ஆவணம் தயாரித்து சிங்க முத்து மூலம் வடிவேலு வாங்கி உள்ளார் என்று குற்றம் சாட்டினார்.
சிங்கமுத்துவிடம் நிலத்துக்கான பவர் இருந்ததாகவும் அதன் மூலம் வடிவேலுக்கு அவர் விற்றதாகவும் கூறப்பட்டது. எனவே சிங்கமுத்து மீது போலீஸ் நடவடிக்கை எடுக்கும் என்றும் தகவல் பரவியது.
இந்த நில பிரச்சினையில் நான் தவறு செய்யவில்லை என்று வடிவேலு கூறினார். சிங்கமுத்து மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை மறைமுகமாக கூறி இருந்தார்.
இதற்கு பதில் அளித்து சிங்கமுத்து அளித்த பேட்டி வருமாறு:-
வடிவேலு நிலம் வாங்கியதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. பொதுவாக அவர் நிலம் வாங்கும்போது எனது பெயரில் பவர் வாங்கி வைத்துக் கொள்வார். வருமான வரி பிரச்சினைகள் வரும் என்பதால் அப்படி செய்வதாக கூறுவார். பிறகு ஒரு நாள் அவற்றை தன் பெயருக்கு மாற்றி வாங்கிக் கொள்வார்.
அதுபோலத் தான் தாம்பரம் இரும்புலியூர் நில விவகாரமும் நடந்தது. எனது பெயரில் பவர் வாங்கி பிறகு அவருக்கு மாற்றிக் கொண்டார். அந்த நில உரிமையாளரின் வீட்டுக்கு தினமும் போய் பேசி குறைந்த விலைக்கு வாங்கினார். நான் இதில் சம்பந்தப்படவில்லை. இதில் என்னை அவர் பலிகடா ஆக்க பார்க்கிறார். நான் எதையும் சந்திக்கத் தயார்.
வடிவேலு எனக்கு சினிமா வாய்ப்பு வாங்கித்தரவில்லை. இவருக்கு வாய்ப்பு கேட்டு நானும் முருகேசன் என்பவரும் ஒவ்வொரு படக்கம்பெனி யாய் ஏறி இறங்கினோம். என்னை பொய் வழக்கில் சிக்க வைக்க வடிவேலு முயன்றார். அவர் மீதான குற்றங்களை ஆதாரத்துடன் வெளியிடுவேன்.
இவ்வாறு சிங்கமுத்து கூறினார்.
No comments:
Post a Comment