அன்னா ஹஸாரேவுக்கு ஆதரவாக தமிழ் சினிமாக்காரர்களில் ஒரு பிரிவினர் இன்று நடத்தும் உண்ணாவிரதத்தில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொள்ளவில்லை. ஆனால் அன்னா தான் என் ஹீரோ என்று அறிக்கை ரஜினி வெளியிட்டுள்ளார்.
ஊழலுக்கு எதிரான அன்னா ஹஸாரேவின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழ் திரையுலகினர் இன்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இதில் ரஜினிகாந்த் கலந்துகொள்ளக்கூடும் என்று கூறப்பட்டது. இதனால் ரஜினி எப்பொழுது வருவார் என்று பலர் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் ரஜினி வரவில்லை. மாறாக அவர் அன்னாவுக்கு ஆதரவாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் ரஜினிகாந்த் கூறியிருப்பதாவது,
நாடாளுமன்றத்தில் ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி போராடி வரும் அன்னா குழுவினரை நான் மனதாரப் பாராட்டுகிறேன். ஊழலுக்கு எதிராகப் போராட அன்னா ஹஸாரே என்னும் திறமையான தலைவர் கிடைத்துள்ளதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
ரத்தமில்லாத இந்த புரட்சிக்கு ஆதரவு தெரிவித்து வருபவர்களை நான் பாராட்டுகிறேன். சத்யாகிரகம் பிறந்த இந்தியாவில் தான் இது போன்ற அமைதியான இயக்கங்கள் செயல்பட முடியும் என்று அவர் கூறியுள்ளார்.

No comments:
Post a Comment