முட்டை பொறிந்து குஞ்சு வெளிவருவதற்குள் அதை ஆம்லெட் ஆக்கிவிட்டார்கள். நேற்றுதான் ஏக சந்தோஷமாக மங்காத்தா படத்தை தாங்கள் வாங்கிவிட்டதாக விளம்பரம் வெளியிட்டது கார்த்தி சூர்யா பிரதர்சின் உறவினர் நிறுவனமான ஸ்டுடியோ கிரீன். அதற்குள் இந்த கைமாற்றலில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளதாம்.
மேற்படி விளம்பரத்தில் படத்தின் தயாரிப்பாளரான துரை.தயாநிதியின் பெயரே வரவில்லை. அதுமட்டுமல்ல, படத்தை தயாரித்த கிளவுட் நைன் நிறுவனத்தின் பெயரும் இல்லை. இந்த படத்தை வாங்கும்போதே "இப்படியெல்லாம் பெயர் போட வாய்ப்பில்லை. ஏனென்றால் மங்காத்தாவை ஜெயா டி.வி க்குதான் சேட்டிலைட் உரிமை விற்கப்போகிறோம்" என்றார்களாம் ஸ்டுடியோ கிரீன் தரப்பில். அதையும் ஒப்புக் கொண்டாராம் துரை.தயாநிதி.
இந்த விளம்பரத்தை பார்த்த தயாநிதியின் நெருங்கிய சொந்தங்கள், இப்படி நமது நிறுவனத்தின் பெயரில்லாமல் படத்தை விற்க வேண்டிய அவசியம் என்ன வந்தது என்று கோபித்துக் கொண்டதாக தெரிகிறது. படத்தை சன் பிக்சர்சிடம் விற்றுக் கொள்ளலாம் என்றும் கூறிவிட்டார்களாம்.
இதையடுத்து மங்காத்தாவை சன் பிக்சர்ஸ் வெளியிடக் கூடும் என்ற தகவல் உலவுகிறது கோடம்பாக்கத்தில். அஜீத் படத்தை எவ்வித சிரமமும் இல்லாமல் உட்கார்ந்த இடத்திலேயே விற்று ஐந்து கோடி வரைக்கும் லாபம் ஈட்டலாம் என்று நினைத்திருந்த ஸ்டுடியோ கிரீன், இந்த திடீர் மாற்றத்தால் லேசான அப்செட் என்கிறார்கள்.
மங்காத்தா வெளிவருவதற்குள் இன்னும் என்னென்ன மாற்றங்கள் வருமோ?
No comments:
Post a Comment