நடிகை திரிஷா திரையுலகுக்கு வந்து 10 வருடங்கள் ஆகிறது. இதுவரை அவர் 40 படங்களில் நடித்து இருக்கிறார். அவருக்கு இப்போது 28 வயது ஆகிறது. தற்போது திரிஷா திருமணம் செய்துகொள்ள சம்மதம் தெரிவித்து இருக்கிறார். அவருக்கு மாப்பிள்ளை வேட்டை நடக்கிறது.
திரிஷாவுடன் சமீபகாலமாக அம்ருத் என்ற இளம் தொழில் அதிபர் சேர்ந்து சுற்றுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவர்தான் திரிஷாவை திருமணம் செய்துகொள்ளப்போகிறார் என்றும் தகவல்கள் பரவியுள்ளன.
இதுபற்றி திரிஷாவிடம் கேட்டபோது, அதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:
அம்ருத் என் நண்பர்தான். கணவர் அல்ல. பல நிகழ்ச்சிகளில் நாங்கள் இருவரும் கலந்து கொண்டிருக்கிறோம். அவ்வளவுதான். எனக்கு கணவராக வருபவரை இதுவரை நான் சந்திக்கவில்லை.
என் திருமணம் அடுத்த வருடம் ஆரம்பத்தில் நடக்கும்.'' இவ்வாறு திரிஷா கூறினார்.
No comments:
Post a Comment