கர்நாடக மாநிலத்தின் முன்னாள் மந்திரி கட்டா சுப்ரமண்ய நாயுடு. இவரது மகன் கட்டா ஜகதீஷ். இவர்களிருவரும் கர்நாடக தொழிற்சாலை மேம்பாட்டு வாரியத்தில் ஊழல் செய்ததாக கைது செய்யப்பட்டனர்.
பின்னர் இருவரும் பரப்பண்ணா அக்ரஹார மத்திய சிறையில் ஒரே அறையில் அடைக்கப்பட்டனர். அன்றைய தினம் இரவில் சுப்ரமண்ய நாயுடு தனது மகன் ஜெகதீஷை திட்டியும், அடித்தும் உள்ளார்.
அப்போது சுப்ரமணிய நாயுடு, அரசியலில் மிகவும் சிரமப்பட்டு உயர்ந்த நிலைக்கு வந்துள்ளேன். ஆனால் உன்னால் தான் இப்போது சிறையில் உள்ளேன்.
உன்னை மிக செல்லமாக வளர்த்தேன். அந்த செல்லமே இப்போது சிறையில் இருப்பதற்கு வழி வகுத்து விட்டது என்று வருத்தப்பட்டதாக சிறை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:
Post a Comment