அன்னா ஹசாரே போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கன்னட திரைப்பட துறையினர் பெங்களூரில் ஊர்வலம் சென்றனர். ஊர்வலத்தில் நடிகை சரோஜா தேவி தேசிய கொடி ஏந்திச் சென்றார்.
வலிமையான லோக்பால் சட்டத்தை வலியுறுத்தி காந்தியவாதி அன்னா ஹசாரே டெல்லியில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அவருக்கு ஆதரவாக பெங்களூர் சுதந்திர பூங்காவிலும் பலர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் அன்னா ஹசாரே போராட்டத்துக்கு ஆதரவாக 23.08.2011 அன்று கன்னட திரைப்படத்துறையினர் களம் இறங்கினர். அவர்கள் 23.08.2011 அன்று காலை கர்நாடக சினிமா வர்த்தக சபையில் கூடினார்கள். அங்கிருந்து சினிமா வர்த்தக சபை தலைவர் பசந்த் குமார் பட்டீல் தலைமையில் திரைப்பட துறையினர் ஊர்வலமாக சென்றனர்.
இதில் நடிகர் துனியா' விஜய், நடிகைகள் சரோஜாதேவி, ஜெயமாலா, சுருதி, தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் உள்பட திரைப்படத்துறையை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். ரேஸ் கோர்ஸ் சாலை, அனந்த ராவ் சர்க்கிள் வழியாக அவர்கள் போராட்டம் நடைபெறும் சுதந்திர பூங்காவை சென்றடைந்தனர். அவர்கள் உண்ணாவிரத பந்தலில் 1 மணி நேரம் இருந்து போராட்டம் செய்தனர்.
நடிகை சரோஜா தேவி கூறுகையில், "ஊழலுக்கு எதிராக நான் மட்டும் அல்லாமல் கன்னட திரைப்படத்துறையின் அனைவரின் ஆதரவும் உள்ளது என்றார்.
No comments:
Post a Comment