வலிமையான லோக்பால் சட்டம் இயற்ற வலியுறுத்தி காந்தியவாதி அன்னா ஹசாரே 8வது நாளாக உண்ணாவிரதத்தை தொடர்ந்தார்.
இந்நிலையில் அன்னா ஹசாரேயின் உடல் நிலை பாதிக்கப்பட்டது. அவரை ஆஸ்பத்திரியில் அனுமதித்து குளூகோஸ் ஏற்ற வேண்டும் என்று, டாக்டர் நரேஷ் டிரீகன், ராம்லீலா மைதானத்தில் அறிவித்தார். ஆனால், குளூகோஸ் ஏற்றுவதற்கு அன்னா ஹசாரே மறுத்துவிட்டார்.
சோர்வான நிலையிலும், உண்ணாவிரத மேடையில் எழுந்து நின்று மக்கள் மத்தியில் உணர்ச்சிகரமாக அவர் பேசினார். அப்போது அவர்,
‘’ எனது உடல் நிலை மோசமாக இருப்பதாக டாக்டர்கள் கூறுகிறார்கள். நான் உடலால் பாதிக்கப்பட்டாலும் உள்ளத்தால் உறுதியாக இருக்கிறேன்.
கோரிக்கை நிறைவேறும் வரை, போராட்டத்தில் இருந்து ஓயமாட்டேன். அரசு தரப்பில் என்னை வலுக்கட்டாயமாக ஆஸ்பத்திரியில் சேர்க்க முயன்றால், நீங்கள் அதை அனுமதிக்காதீர்கள்.
என்னைச் சுற்றி மனித சங்கிலியாக அணிவகுத்து நின்றும், கேட்டை முற்றுகையிட்டும் ஆஸ்பத்திரிக்கு தூக்கிச் செல்ல விடாமல் தடுத்துவிடுங்கள்’’ என்று கூறினார்.
No comments:
Post a Comment