வேலூரில் இன்று திமுகவினர் நடத்திய போராட்டத்தில் கலந்துகொண்டு கைதான முன்னாள் முதல்வர் துரைமுருகன் நெஞ்சு வலி ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திமுகவினரை பழிவாங்கும் நோக்கில் அதிமுக போடும் பொய் வழக்குகளைக் கண்டித்து இன்று தடையை மீறி தமிழகம் முழுவதும் திமுகவினர் அறப்போராட்டம் நடத்தினர்.
போராட்டம் நடத்திய திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான திமுகவினர் கைது செய்யப்பட்டு பின்னர்
விடுவிக்கப்பட்டனர்.
வேலூரில் போராட்டம் நடத்திய துரைமுருகனை போலீசார் கைது செய்து ஒரு திருமண மண்டபத்துக்கு கொண்டு சென்றனர். இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டவரான துரைமுருகனுக்கு அப்போது நெஞ்சு வலி ஏற்பட்டது.
இதையடுத்து போலீஸார் உடனடியாக அருகில் இருந்த தனியார் மருத்துவமனையின் ஆம்புலன்ஸை வரவழைத்தனர். அதில் வந்த மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர்.
மருத்துவமனையில் சேர விரும்பினால், சேரலாம் என போலீசார் கூறியபோதும், அதை துரைமுருகன் ஏற்க மறுத்துவிட்டார். தான் நலமுடன் இருப்பதாகக் கூறி ஆம்புலன்ஸை திருப்பி அனுப்பிவிட்டார்.
எதிலும் அரசியல் பார்வை என்பது ஏற்கத் தக்கதல்ல-வீரமணி
இந் நிலையில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜனநாயகத்தில் அரசியல் கட்சிகள் அறப் போராட்டம் நடத்துவது, ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பது இயல்பான ஒன்றாகும். சட்ட ஒழுங்குப் பிரச்சனையை ஏற்படுத்திவிடாமல் அறப் போராக ஆர்ப்பாட்டம் நடத்திடத்தான் திமுக அனுமதி கேட்டது.
இதனை அனுமதிப்பது ஒரு ஜனநாயக ஆட்சியின் கடமையாகும். சில இடங்களில் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதியையும் கொடுத்துவிட்டு, பிறகு அதனை ரத்து செய்திருப்பது, ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வந்தவர்களை கைது செய்வது என்பது சர்வாதிகாரப் போக்கே அல்லாமல் ஜனநாயகத்துக்கு உகந்தது அல்ல.
அதிமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது ஊருக்கு ஊர் போராட்டங்களை நடத்தினார்களே. அவற்றிற்கெல்லாம் திமுக ஆட்சியில் அனுமதி கொடுக்கப்பட்டதே.
எதிலும் அரசியல் பார்வை என்பது ஏற்கத் தக்கதல்ல. மக்கள் மத்தியில் அவப் பெயரைத்தான் தேடிக் கொடுக்கும். எனவே கைது செய்யப்பட்ட தோழர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசை கேட்டுக்கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.

No comments:
Post a Comment