அதிமுக, திமுக கூட்டணிகள் அவர்களாகவே விடுதலை சிறுத்தை கட்சி தங்கள் கூட்டணியில் உள்ளது என்பார்கள், அவர்களாகவே இல்லை என்றும் கூறுவார்கள். கூட்டணி அமைப்பது என்பது கூட்டணி தலைவர்களின் முடிவை பொறுத்தே அமைந்து வருகிறது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.
விடுதலை சிறுத்தை கட்சியின் வெளியீட்டு மைய மாநில துணைச் செயலாளர் பொன்னிவளவன்- கல்பனா ஆகியோரின் திருமணம் புதுவையை அடுத்த திருச்சிற்றம்பலத்தில் நடந்தது. திருமணத்தை தலைமை தாங்கி நடத்தி வைத்து திருமாவளவன் பேசுகையி்ல்,
விடுதலைச் சிறுத்தை கட்சி எந்த கூட்டணியில் இருந்தாலும், அதன் கொள்கை, கோட்பாடு, செயல்களை இழந்தது கிடையாது. எந்தக் கட்சி தலைவருமே என்னை அதைப் பற்றியோ, இதைப் பற்றியோ பேசக்கூடாது என கட்டளையிட்டது கிடையாது. நான் சாதி உணர்வை கூர்மைபடுத்தி அதன் மூலம் அரசியல் நடத்துபவன் அல்ல.
சாதிகளுக்கிடையே மோதல் இருக்க கூடாது. இதனால் ஏற்பட்ட காயங்கள், சிந்திய ரத்தங்கள் இருந்தாலும் அதனை மறந்து வருங்கால சந்ததிகளுக்கு பாதிப்புகள் இருக்க கூடாது என்பதற்காகவே சாதிகள் அமைப்புகளோடும், சாதி சங்கங்களோடும் கைகோர்த்துள்ளேன். பாமகவுடன் நட்புணர்வு கொண்டுள்ளேன்.
தேர்தலில் சரியான யுக்தியை கையாண்டிருந்தால் தோல்வி ஏற்பட்டு இருக்காது என்று விமர்சனம் செய்கின்றனர். கடந்த காலங்களில் அதிமுக கூட்டணியில் இருந்தபோது அவர்களே நம்மை வெளியேற்றி விட்டனர். 2009ல் நாடாளுமன்ற தேர்தலிலும் கூட்டணியில் விடுதலை சிறுத்தை கட்சி வேண்டாம் என்று அதிமுக கூறிவிட்டது.
மேலும் ஈழப்பிரச்சினையில் அதிமுக முரண்பாடாகவே செயல்பட்டது. 2001ம் ஆண்டு முதல் அதிமுக, திமுக இல்லாத மாற்று கூட்டணி வேண்டுமென்று ஜி.கே.மூப்பனார், டாக்டர் ராமதாஸ், நெடுமாறன் ஆகியோரிடமும் எடுத்துக்கூறி வந்துள்ளேன்.
அதிமுக, திமுக கூட்டணிகள் அவர்களாகவே விடுதலை சிறுத்தை கட்சி தங்கள் கூட்டணியில் உள்ளது என்பார்கள், அவர்களாகவே இல்லை என்றும் கூறுவார்கள். கூட்டணி அமைப்பது என்பது கூட்டணி தலைவர்களின் முடிவை பொறுத்தே அமைந்து வருகிறது. எந்த கூட்டணியில் இருந்தாலும் விடுதலை சிறுத்தை கட்சி அதன் தன்மையை இழந்தது கிடையாது.
கடந்த காலத்தில் இந்த இயக்கத்தில் திருமணத்தை பற்றி யாரும் பேசியது இல்லை. நம்மீது போடப்பட்ட வழக்குகளை பற்றிதான் பேசி இருக்கிறோம். சிலர் என்னிடம் நான் திருமணம் செய்து கொண்டால் தான் கட்சி தொண்டர்கள் திருமணம் செய்து கொள்வார்கள் என்று கூறினார்கள். நான் திருமணம் செய்து கொள்வேன் என்று எதிர்பார்த்திருந்து விட்டு இப்போது அவர்களாகவே திருமணம் செய்து கொள்கிறார்கள்.
திருமண வாழ்வு, பொது வாழ்க்கையை பாதிக்காது. விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் இதனை பலமுறை என்னிடம் கூறியுள்ளார் என்றார் திருமாவளவன்.
இலங்கை தமிழர்கள் என்னை நம்புவது இல்லை:
முன்னதாக சென்னையில் நிகழ்ச்சியொன்றில் பேசிய அவர், இலங்கைத் தமிழர்களுக்காக நான் 25 ஆண்டுகளாக குரல் கொடுத்து வருகிறேன். ஆனால், நான் திமுக கூட்டணியில் உள்ள ஒரே காரணத்தால் இலங்கைத் தமிழர்கள் என்னை நம்புவது இல்லை என்றார்.

No comments:
Post a Comment