அன்புமணி பற்றி விமர்சித்துள்ள தி.மு.க., முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு பா.ம.க., தலைவர் ஜி.கே.மணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து, பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தி.மு.க.,ஆட்சியில் அமைச்சராக இருந்த பொன்முடி, நாகரிகமற்ற வகையில் பேசியுள்ளார். பா.ம.க., இளைஞரணி தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணியை விமர்சித்துள்ளார்.
சட்டப் பேரவை தேர்தலில் தி.மு.க., கூட்டணி தோல்வி அடைந்ததற்கு தி.மு.க., தலைவர் கருணாநிதியின் குடும்ப ஆதிக்கம்தான் காரணம் என்ற உண்மையை அன்புமணி சொன்னதை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
கோவையில் நடந்த தி.மு.க., பொதுக்குழுக் கூட்டத்திலும் இதே கருத்தை வலியுறுத்த வேண்டும் என்று தமது ஆதரவாளர்களுக்கு தி.மு.க., பொருளாளர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு தெரியாது போலிருக்கிறது.
தி.மு.க.வைச் சேர்ந்த மூத்த தலைவர்களும், முன்னாள் அமைச்சர்களும் கூட இதே நிலைப்பாட்டைதான் கொண்டிருந்தனர். இந்த உண்மையை நாசூக்காக அன்புமணி கூறியிருந்தார். இதன் பின்னணியில் காழ்ப்புணர்ச்சியோ அல்லது எவரையும் புண்படுத்த வேண்டும் என்ற எண்ணமோ இல்லை. சாத்தான்கள் வேதம் ஓதுவதைப் போல நாவடக்கத்தைப் பற்றி நண்பர் பொன்முடி அறிவுரை வழங்கியிருக்கிறார்.
விழுப்புரம் மாவட்டத்தில் பொன்முடியின் மனைவி படத்தையோ, மகன் படத்தையோ போடாமல் தி.மு.க.,வினர் எவரேனும் சுவரொட்டிகளை அச்சிட்டு விட முடியுமா? அவ்வாறு அச்சிட்டால் அதன் பின்பு அவர்கள் கட்சியில் நீடிக்க முடியுமா? திமுகவுக்காக பொன்முடியின் மனைவியும், மகனும் செய்த தியாகம் என்ன? திமுகவுக்கு உதயசூரியன் சின்னத்தை பெற்றுத் தந்தவரே விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கோவிந்தசாமி தான்.
அவருக்கும், அவரது மகன் ஏ.ஜி.சம்பத் போன்றவர்களுக்கும், பொன்முடிக்கு அரசியலைக் கற்றுத்தந்த செஞ்சி ராமச்சந்திரனுக்கும், தி.மு.க.,வுக்காக உண்மையாக உழைத்த விழுப்புரத்தைச் சேர்ந்த மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கும் துரோகம் செய்து விட்டு, அவர்களை புறக்கணித்து விட்டு அரசியல் நடத்தும் பொன்முடிக்கு எங்களைப் பற்றி பேச எந்த அருகதையும் கிடையாது.
இதன் பிறகாவது பொன்முடி அவரது பிதற்றலை நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் 1967 ம் ஆண்டு முதல் திமுகவுக்காக உண்மையாக உழைத்தவர்களை பின்னுக்குத் தள்ளி விட்டு, அதிகாரத்தை கையில் எடுத்துக் கொண்டு குடும்ப அரசியல் நடத்தி வரும் திமுக-வினர் யார்- யார்? என்ற பட்டியலை வெளியிட நேரிடம் என்று ஜி.கே.மணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதன்மூலம் தி.மு.க.,-பா.ம.க., மோதல் உச்சக் கட்டத்தை எட்டியுள்ளது.

No comments:
Post a Comment