த்ரிஷா உனக்குதான் என்று அவன் இவன் படத்தில் விஷாலை பார்த்து ஆர்யா பேசிய டயலாக்குக்கு அவ்வளவு சீக்கிரம் கண்ட்ரோல் ஆல்ட் டெலிட் கொடுப்பார் என்று கனவிலும் கூட நினைத்திருக்க போவதில்லை விஷாலின் ரசிகர்கள். தென்னங்கீற்றும், தென்றல் காற்றாகவும் இருக்கிறார்களாம் இவரும் வரலட்சுமியும்.
யார் இந்த வரலட்சுமி? போடா போடி வந்திருந்தால் இந்த கேள்வியே எழுந்திருக்காது. நடிகர் சங்க தலைவர் சரத்குமாரின் மகளும், போடா போடி நாயகியும்தான் இந்த வரலட்சுமி.
எங்கே அடித்தது மின்னல், எப்போ திறந்தது ஜன்னல் என்பதையெல்லாம் பற்றி இன்னும் கொஞ்ச நாட்களில் மாறி மாறி பேட்டியாக கொடுப்பார்கள் என்று நம்பலாம். இப்போதைக்கு இந்த விஷயத்தை பற்றி கருத்து கூறியிருக்கும் விஷால், நானும் அவரும் நல்ல பிரண்ட்ஸ். அவ்வளவுதான் என்று பதிலளித்திருக்கிறார்.
இவர் இப்படி சொன்னாலும் இந்த காதலுக்கு விஷாலின் குடும்பம் பலத்த எதிர்ப்பு தெரிவித்திருக்கிறதாம். சரத்குமார் ஹீரோவாக நடித்த சில படங்களை விஷாலின் அப்பா ஜி.கே.ரெட்டி தயாரித்திருக்கிறார். ஒருவேளை இந்த எதிர்ப்பு அதன் காரணமாகவும் இருக்கலாம்!

No comments:
Post a Comment