"சிலம்பரசன் என்றைக்குமே எனக்கு நண்பராக இருந்ததில்லை. யாராக இருந்தாலும் நேரடியாக சவால் விட்டு மோதுவதுதான் ஆரோக்கியமான போட்டியாக இருக்கும். ஆனால், பின்னாலிருந்து குத்தும் வேலையைச் செய்கிறார். அது ஆரோக்கியமான போட்டி அல்ல‘'
சிம்புவை பற்றி நடிகர் ஜீவா இப்படி பேட்டியளித்தபின் சும்மாயிருக்குமா கோடம்பாக்கம். கொந்தளித்துப் போயிருக்கிறது. இந்த சண்டையை எப்படி பார்க்கிறார்கள் தயாரிப்பாளர்கள்? சமீபத்தில் இவர்கள் பிரச்சனையில் தலையை கொடுத்த ஒரு தயாரிப்பாளர் சொன்ன பதிலை கேட்டால் புரியும்.
அதை சொல்வதற்கு முன் ஒரு நிஜத்தை சொல்லியாக வேண்டும். சிம்பு சுமார் ஆறு கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார். ஆனால் அதில் பாதியை கூட இன்னும் எட்டவில்லை ஜீவா. சிம்புவின் வெற்றியும் ஜீவாவின் வெற்றியும் கிட்டதட்ட இணையாகவே இருக்கிறது. சிம்பு ஒரு விண்ணைதாண்டி வருவாயா கொடுத்தால், ஜீவா ஒரு கோ கொடுத்திருக்கிறார். அப்புறம் எப்படி இந்த சம்பள ஏற்றத் தாழ்வு? வேறொன்றுமில்லை, படத்தின் வியாபாரம்தான் இதை தீர்மானிக்கிறது. ஜீவாவின் பிசினஸ் சுமார் பத்து கோடி. சிம்புவின் பிசினஸ் சுமார் பதினெட்டு கோடி. இதுதான் இவ்விருவரின் சம்பளத்தையும் இப்படி மேடு பள்ளமாக தீர்மானித்து வைத்திருக்கிறது.
சரி தயாரிப்பாளர் சொன்ன விஷயத்துக்கு வருவோம். இன்னும் துவங்கப்படாத படம் ஒன்றில் நடிக்க இருவருக்குமே போட்டி. சிம்புவும், ஜீவாவும் நான்தான் இந்த படத்தில் நடிப்பேன் என்று போட்டி போட, குழப்பமே இல்லாமல் தயாரிப்பாளர் எடுத்த முடிவு ஜீவாவின் பக்கம் சாய்ந்ததுதான்.
என்ன இப்படி பண்ணீட்டீங்க என்று சிம்பு அதிர்ச்சியோடு கேள்வி கேட்டபோது தயாரிப்பாளர் இப்படி சொன்னார். உங்களை விட ஜீவா பல மடங்கு சம்பளம் குறைச்சு வாங்குகிறார். ஆனால் உங்க அளவுக்கு வியாபாரம் இல்லை. இந்த வியாபாரத்துக்கு ஆசைப்பட்டு உங்களை கமிட் பண்ணினா, எப்போ ஷுட்டிங் கேன்சலாகும், எப்போ ஷுட்டிங் வருவீங்க என்பதையெல்லாம் அந்த கடவுளால் கூட தீர்மானிக்க முடியாது. தேலையில்லாத டென்ஷனை தேடிப் போய் வாங்குவதைவிட குறைவா சம்பளம் வாங்குனாலும் சொன்ன நேரத்தில் வர்ற ஜீவாவே மேல். இதனால் லாபம் குறைஞ்சாலும் டென்ஷன் தலைவலி இல்ல பாருங்க என்றாராம்.
பணியாரமா, தோசையா என்பதை மாவின் கெட்டி தன்மைதான் தீர்மானிக்கிறது, இல்லையா சிம்பு?
No comments:
Post a Comment