சமச்சீர் கல்வி திட்டத்தை அமுல்படுத்தாத அதிமுக அரசை கண்டித்து காஞ்சிபுரத்தில் இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரம் பெரியார் நினைவு தூண் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான மாணவர்கள் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த முனிச் செல்வம் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
சமச்சீர் கல்விக்கான பாடப்புத்தகங்களை உடனடியாக வழங்க வேண்டும். இனியும் காலம் தாழ்த்தாமல் மாணவர்களுக்கு வழங்கிட வேண்டும். நாட்டில் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் சமமான கல்வியை கொடுக்கக்கூடிய பொதுபாடத்திட்ட முறையான சமச்சீர்கல்வியை செயல்படுத்த வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment