சொந்த தொகுதியான திருப்பதிக்கு வந்த நடிகரும் எம்எல்ஏவுமான சிரஞ்சீவியை முற்றுகையிட்டனர் அந்தப் பகுதியைச் சேர்ந்த பெண்கள். ஓட்டுப்போட்ட மக்களுக்கு எதுவும் செய்யாத சிரஞ்சீவி ஒழிக என்று அவர்கள் கோஷமிட்டனர்.
தேர்தலில் வென்று எம்எல்ஏ ஆன கையோடு, மக்கள் பணியை மறந்துவிட்டு பிரஜா ராஜ்யம் கட்சியை காங்கிரஸில் இணைக்கும் வேலையில் தீவிரமாக இருந்த சிரஞ்சீவி நேற்று திருப்பதிக்கு வந்தார். அவர் நின்று வென்ற தொகுதி இது.
ஏனாதி காலனி என்ற இடத்தில் புதிய பள்ளிக்கூட கட்டிடத்தை திறந்து வைத்தார்.
பின்னர் காரில் ஏறி புறப்பட்ட அவரை திடீரென வந்த பெண்கள் முற்றுகையிட்டனர். "ரசிகைகளான நாங்கள் உங்களை வெற்றி பெற வைத்தோம். ஜெயித்து 3 வருடம் ஆகிறது. திருப்பதி நகரில் நிலவும் குடிநீர் பற்றாக்குறை, கழிவு நீர் வாய்க்கால்கள் தூர்த்து விட்டதால் தெருவில் ஆறாக ஓடும் கழிவு நீர், போக்குவரத்து நெரிசல், மின்சார பற்றாக்குறை ஆகிய குறைகளை தீர்க்கும்படி பலமுறை மனு கொடுத்தோம். ஏன் இன்னமும் அவற்றை தீர்த்து வைக்க வில்லை,'' என்று சரமாரியாக கேள்வி கேட்டு திணறடித்தனர்.
எந்தப் பணியும் மக்களுக்காக செய்யாத சிரஞ்சீவி ஒழிக என அவர்கள் தொடர்ந்து கோஷமிட்டனர்.
அந்தப் பெண்களை போலீசார் விரட்டியடிக்க முயன்றனர். அவர்கள் சிரஞ்சீவி ஒழிக என்று தொடர்ந்து கோஷம் போட்டனர். இதனால் வெறுப்படைந்த சிரஞ்சீவி கோபமாக காரில் ஏறிச் சென்று விட்டார். போராட்டம் நடத்திய பெண்களில் சிலரை கைது செய்த போலீசார் சிறிது நேரம் கழித்து விடுவித்தனர்.
போற போக்கை பார்த்தா விஜயகாந்த்கும் இந்த நிலைமை சீக்கிரமாகவே வரும் போல இருக்கிறது

No comments:
Post a Comment