மத்திய மந்திரிகள் குழு தயாரித்த லோக்பால் வரைவு மசோதா மற்றும் தன்னுடைய குழு தயாரித்த லோக்பால் வரைவு மசோதா குறித்து பொதுமக்களிடம், குறிப்பாக மத்திய மந்திரி கபில் சிபல் தொகுதியான சாந்தினி சவுக் பாராளுமன்ற தொகுதியில் நடத்திய கருத்து கணிப்பில் 85 சதவீதம் பேர் தங்களுடைய மசோதாவுக்கே ஆதரவு அளித்து இருப்பதாக அன்னா ஹசாரே (01.08.2011) நிருபர்களிடம் கூறினார்.
மந்திரிகள் குழு தயாரித்த மசோதாவுக்கு ஆதரவு இல்லை. ஆகவே மக்கள் கருத்தை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் மனீஷ் திவாரி கருத்து தெரிவித்து உள்ளார். அவர் கூறும்போது, அன்னா ஹசாரே நடத்திய கருத்து கணிப்பு பற்றி கேள்விப்பட்டேன். 2014 ம் ஆண்டு, அவர் கருத்து கணிப்பு நடத்திய சாந்தினி சவுக் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட தயாரா? அப்போது உண்மை வெளிவரும். பாராளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்ட பிறகு அதன் மீதும், அதன் அறிவார்ந்த முடிவு மீதும் அவர் நம்பிக்கை வைக்க வேண்டும்'' என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment