பத்மநாப சுவாமி கோவில் நகைகளைக் கொள்ளையடித்தவர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வர உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப் போவதாக கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் பல லட்சம் கோடி மதிப்பிலான பொக்கிஷங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதில் இருந்து இந்த கோவில் பற்றி தினமும் ஏதாவது பரபரப்பு செய்தி வந்து கொண்டே இருக்கிறது.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டிளித்த முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் பத்மநாப சுவாமி கோவில் ரகசிய அறைகளில் உள்ள பொக்கிஷங்களை மன்னர் உத்திராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மா கடத்தி சென்றதாகவும், பாயாச வாலியில் கடத்திச் சென்றதை தட்டிக் கேட்ட கோவில் பூசாரியை மன்னர் வென்னீ்ர் ஊற்றி கொலை செய்ய முயன்றதாகவும் கூறினார். இது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அச்சுதானந்தனின் இந்த பேட்டிக்கு உத்திராடம் மார்த்தாண்ட வர்மா பதில் கூற மறுத்தாலும் அவருக்கு ஆதரவாக இந்து அமைப்புகள் குரல் கொடுத்தன. முதல்வர் உம்மன்சாண்டி உள்ளிட்ட பல்வேரு அரசியல் கட்சி தலைவர்களும் அச்சுதானந்தன் பேச்சுக்கு கண்டணம் தெரிவித்தனர். இந்நிலையில் அச்சுதானந்தன் நேற்று அடுத்த அதிரடி பேட்டி ஒன்றை கொடுத்தார்.
அப்போது அவர் கூறியதாவது,
கோவில் பொக்கிஷங்களை திருவிதாங்கூர் மன்னர் உத்திராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மா கடத்திச் சென்றது குறித்து கூறியது எனது சொந்த கருத்து அல்ல. இது குறித்து எனக்கு ஏராளமான புகார்கள் கிடைத்தன. அதைத் தான் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தேன்.
இந்த விவகாரத்தில் உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வர உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யவும் தீர்மானித்துள்ளேன். மன்னர் கோவிலில் இருந்து பல முறை பொக்கிஷங்களை கடத்திச் சென்றதாக அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஒரு முன்னாள் ராணுவ வீரர் புகார் கூறியிருந்தார். ஆனால் அவரை உடனடியாக கோவிலில் இருந்து நீக்கி விட்டனர் என்றார்.

No comments:
Post a Comment