பல நாள் நோயாளி ஒருநாள் இருமுன மாதிரி, நுரையீரலே வெளியில் வர்ற அளவுக்கு பொங்கி வெடிக்கிறார்கள் திரையுலகத்தில் வடிவேலு பற்றி. அதிலும் சுறா படத்தை இயக்கிய எஸ்.பி.ராஜ்குமார் புலம்புவது சற்று கவலையாக கூட இருக்கிறது.
சுறா படத்தில் வெண்ணிறாடை மூர்த்தி மேடையில் அமர்ந்து சங்கீதம் பாடுவது போலவும், அவரை பாடவிடாமல் வடிவேலு எதிரில் அமர்ந்து ஊறுகாய் தின்பது போலவும் ஒரு காட்சி வருமே, நினைவிருக்கிறதா? அரைநாளில் எடுத்து முடிய வேண்டிய அந்த காட்சியை மூன்று நாட்கள் எடுக்க வைத்துவிட்டார் வடிவேலு. அந்த படத்தில் அவர் எனக்கு கொடுத்த குடைச்சலை என் வாழ்நாளில் மறக்க மாட்டேன் என்று கதறிக் கொண்டிருக்கிறார் இப்போது.
என்ன நடந்ததாம்? சென்னைக்கு வெளியே சுமார் 50 கிலோ மீட்டர் தாண்டிதான் இந்த காட்சியை எடுத்துக் கொண்டிருந்தாராம் எஸ்.பி.ராஜகுமார். அன்றைய படப்பிடிப்பில் விஜய்யும் இருந்தாராம். திடீரென்று கேரவேனில் உள்ள ஏசி வேலை செய்யவில்லை. அதனால் என்ன, பரவாயில்லை. சர்வீசுக்கு ஆளை வரச்சொல்லுங்க என்று கூறிய விஜய், வெளியே அமர்ந்து இயற்கை காற்றை அனுபவிக்க துவங்கிவிட்டார். ஆனால் வடிவேலு யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் வீட்டுக்கு போய்விட்டாராம். இதுபோல மூன்று நாளும் மூன்று காரணங்களை சொல்லி, சட்டென்று முடிய வேண்டிய காட்சியை இழு இழு என்று இழுத்தார் என்று புலம்பிய ராஜ்குமார் இன்னொரு கேள்வியை எழுப்பினார்.
பிறக்கும் போதே செல்வ செழிப்பில் பிறந்து, எப்போதும் ஏ.சியில் வளர்ந்த அவ்வளவு பெரிய ஹீரோவான விஜய்யே அமைதியாக இருக்கும் போது இவருக்கு முடியாதா? இத்தனைக்கும் கிராமத்துல இருந்து வந்த ஆளு. என்னத்தை சொல்ல என்று தலையிலடித்துக் கொண்டார்.
No comments:
Post a Comment