சேலத்தை சேர்ந்த அதிமுக வக்கீல் மணிகண்டன் டி.ஜி.பி. ராமானுஜத்தை சந்தித்து புகார் மனு கொடுத்தார்.
அம்மனுவில், ‘’சேலம் பிரீமியர் ரோலர் மில் நில அபகரிப்பு மற்றும் அங்கம்மாள் காலனி நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் சரண் அடைந்தார்.
விசாரணையின் இறுதி நாளான 27-ந் தேதி அன்று சேலம் மாநகர உதவி போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன்பு பெண் வேடமிட்ட ஒருவர் வீதியில் வந்து நடனமாடினார்.
திமுகவினர் அவரை சுற்றி நின்று கொண்டு ஆபாசமாக பேசிக் கொண்டிருந்தனர். தமிழக முதல்வரையும் அவதூறாக பேசினர்.
ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர். ஆனால் இதை யாரும் தட்டிக்கேட்கவில்லை. ஏற்கனவே வீரபாண்டி ஆறுமுகம் ஆபாசமாக பேசிய புகார் மீதும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்பட வில்லை.
இந்த சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட போட்டோக்கள் மற்றும் சி.டி.க்களை இதனுடன் இணைத்துள்ளேன். எனவே பெண் வேடமிட்டு நடனம் ஆடியவர், ஆபாசமாக பேசியவர்கள் மீதும் இப்போராட்டத்தை தூண்டிய வீரபாண்டி ஆறுமுகம் மற்றும் வேடிக்கை பார்த்த போலீசார் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.
No comments:
Post a Comment