திருமணத்துக்கு முன்பும், திருமணத்துக்கு பின்பும் முத்தத்தை பரிமாறிக் கொள்வதில் ஏதாவது மாற்றங்கள் ஏற்படுகிறதா? என்பது குறித்து இங்கிலாந்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில் வெளியான ருசிகர தகவல் வருமாறு:-
இங்கிலாந்தில் திருமணமானவர்களில் 5-ல் ஒருவர் வாரத்தில் ஒருமுறை கூட முத்தத்தை பகிர்ந்து கொள்வது கிடையாது. எப்போதாவது அவர்கள் முத்தத்தை பகிர்ந்து கொண்டாலும் அது அழுத்தமாகவோ, நீண்ட நேரம் கொண்டதாகவோ இருப்பதில்லை.
அதிகபட்சமாக 5 வினாடிகள் முத்தம் கொடுப்பதே பெரிய விஷயமாக உள்ளது. இளம் ஜோடியினர் வாரத்துக்கு 11 முறை முத்தத்தை பகிர்ந்து கொள்கின்றனர். அவர்கள் பகிர்ந்து கொள்ளும் முத்தம் மிகவும் அழுத்தமானதாகவும், அதிக நேரம் கொண்டதாகவும் இருக்கிறது.
இளஞ்ஜோடியினர் 5 நிமிடங்கள் வரை முத்தம் கொடுத்துக் கொள்கின்றனர். முத்தத்தை முறையாக பகிர்ந்து கொள்ளும்போது அது மனிதர்களின் ஆயுளை அதிகரிக்கிறது என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
பள்ளி குழந்தைகளிடையே முத்தம் கொடுக்கும் திறமையை வளர்க்க, தேசிய பாடத்திட்டத்தின் ஒருபகுதியாக முத்தத்தை வைக்கலாம் என்று இங்கிலாந்து இதய பாதுகாப்பு பவுண்டேசன் பரிந்துரைத்துள்ளது.
No comments:
Post a Comment