ஜன லோக்பால் குறித்து பிரதமர் மன்மோகன் சிங் அல்லது ராகுல்காந்தியுடன் தான் பேசுவேன் என்று அன்னா ஹசாரே அறிவித்தார். இது தொடர்பாக டெல்லியில் நேற்று காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை நடத்தினார்கள்.அன்னா ஹசாரேயுடன் பேச்சு நடத்த ராகுல் காந்தியை நேரில் அனுப்பலாம் என்று பெரும்பாலான காங்கிரஸ் தலைவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
ராகுல்காந்தி இந்த விவகாரத்தில் தலையிட்டால் உடனடியாக தீர்வு கண்டுவிட முடியும் என்று நம்புகிறார்கள். ஆனால் ராகுல்காந்தி மத்திய அரசில் எந்த ஒரு பொறுப்பிலும் இல்லை. எனவே அரசு தரப்பில் அவர் எத்தகைய உறுதி மொழிகளை வழங்க முடியும் என்ற சர்ச்சை நிலவுகிறது.
மத்திய அரசுக்கும் அன்னா குழுவுக்கும் இடையே ராகுல்காந்தி தூதராக செயல்பட முடியாமல் போனால், மராட்டிய முதல்-மந்திரி பிரதிவி ராஜ் சாவனை பேச்சு வார்த்தைக்கு பயன்படுத்தலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.ஆனால் மன்மோகன்சிங், ராகுல் காந்தி வராவிட்டால் காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் பேச்சு நடத்தவே அன்னா ஹசாரே குழு விரும்புகிறது.
இந்த நிலையில் ஆன்மீகத் தலைவர் ஸ்ரீரவிசங்கர் நேற்று காலை அன்னா ஹசாரேயுடன் பேசினார். பிறகு காங்கிரஸ் தலைவர்களையும், பா.ஜ.க. தலைவர்களையும் சந்தித்து பேசினார். அரசுக்கும், அன்னா குழுவுக்கும் இடையே சுமூகமான தொடர்பை ஏற்படுத்தும் முயற்சியில் ரவிசங்கர் ஈடுபட்டுள்ளார்.
No comments:
Post a Comment