நாடு முழுவதும் ஆழிப்பேரலை போல ஆர்ப்பரிப்பை ஏற்படுத்தியிருக்கிறது அன்னா ஹசாரேவின் கைது! ஊழலுக்கு எதிரான இந்த போர் மத்திய அரசுக்கு பெரிய தர்ம சங்கடத்தை விளைத்திருக்கிறது. இந்த நிலையில் நாடெங்கும் அவருக்கு ஆதரவான குரல்கள் கேட்க ஆரம்பித்திருப்பது ஆரோக்கியமான தொடக்கமாகவே பார்க்கப்படுகிறது மக்களால்.
இதுபோன்ற தருணங்களில் தாங்கள் விரும்பும் ஹீரோக்கள் என்ன சொல்கிறார்கள் என்ற ஆர்வம் ரசிகர்களுக்கு தோன்றுவது இயற்கைதான். வட நாட்டில் வெளிப்படையாக பேசும் நட்சத்திரங்களை போல தென்னாட்டிலும் பேசுவார்கள் என்று எதிர்பார்த்திருக்கும் இவர்களுக்கு இதுவரை காதில் விழுந்தது கம்மிய குரலில் ஒரு மியாவ் சப்தம்தான்.
தமிழ்சினிமாவில் முதலில் குரல் கொடுத்திருப்பவர் மாதவன். இவருக்கு அடுத்தபடியாக குரல் கொடுத்திருக்கிறார் கமல். மக்களிடம் வரி மூலம் பணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் அதற்கு தகுந்தாற் போல் அடிப்படை வசதி வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை. நாம் கஷ்டப்பட்டு உழைத்த பணம் லஞ்சம், ஊழல் என போகிறது. ஆனாலும் நாட்டின் மீது உள்ள பற்று காரணமாக இங்கு வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். என்னை மாதிரி உள்ள லட்சக்கணக்கான மக்கள் ஒருநாள் மாற்றத்தை ஏற்படுத்துவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
இது கமலின் அபிப்ராயம். ஆனால் பேச வேண்டிய சில முன்னணி ஹீரோக்களுக்கு முதல் வகுப்பிலிருந்து பாடம் எடுத்தால்தான் புரியுமா? அல்லது தெரிந்தும் தெரியாதது போலிருக்கிறார்களா தெரியவில்லை. இன்னும் கருத்து எதுவும் தெரிவித்தபாடில்லை.
மத்திய அரசின் கைகளில் வருமானவரித்துறை இருக்கிறது. அநேக நட்சத்திரங்கள் தங்கள் கருப்பு பணத்திற்கு கேடு வந்துவிடக் கூடாது என்று நினைக்கிறார்கள்! சூழ்நிலை இப்படி முடிச்சு போட்டுக் கொண்டிருக்கும் போது அன்னாவுக்கு ஆதரவாக இவர்களெல்லாம் எப்படி குரல் கொடுக்க முடியும்? அப்படி குரல் கொடுத்தாலும் மத்திய அரசு சந்து வழியாக சங்கடத்தை அனுப்பி வைக்காதா என்று சந்தேகிக்கிறார்கள் சற்று யோசிக்க தெரிந்த ரசிகர்கள்.
தொடரட்டும் உங்கள் பாதை நன்றி சகோ
ReplyDelete