இலங்கையில் உள்ள கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியில் புகழ்பெற்ற சிவன் கோவில் உள்ளது. இங்கு தினந்தோறும் ஏராளமான தமிழர்கள் சென்று வழி படுவது வழக்கம்.
இந்த சிவன் கோவிலில் 50-க்கும் மேற்பட்ட சிங்கள ராணுவ வீரர்கள் அதிரடியாக புகுந்தனர். பின்னர் கருவறை அருகே நின்று தரிசனம் செய்து கொண்டிருந்த ஆண், பெண்களை சரமாரியாக தாக்கி விரட்டி அடித்தனர். பின்னர் கோவில் அர்ச்சகர்களிடம் சென்று இங்கு பாரம்பரிய புத்தர் சிலை ஒன்று உள்ளது.
அதை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும். இல்லாவிட்டால் சிவன் கோவிலை இடித்து தரைமட்டமாக்குவோம் என்று மிரட்டினார்கள். பின்னர் கோவில் முன்பு ஏராளமான சிங்கள ராணுவத்தினர் நிறுத்தப்பட்டனர். அவர்கள் கோவிலுக்கு வரும் பக்தர்களை ஆயுதங்கள் காட்டி மிரட்டி வருகின்றனர்.
இதனால் அப்பகுதி மக்கள் சிவன் கோவில் அருகே செல்ல அஞ்சி நடுங்குகிறார்கள். கிளிநொச்சி பகுதியில் உள்ள தமிழர்களை விரட்டியடிக்கும் நோக்கத்தில் சிங்கள ராணுவம் இதுபோன்ற இழிவான செயல்களில் ஈடுபடுவதாக தமிழ் அமைப்பினர் கூறினார்கள்.
No comments:
Post a Comment