இலங்கை பத்திரிகை ஒன்றில் தமிழகத்துக்கு எதிராக செய்தி வெளியாகி இருந்தது. அந்த செய்திக்குறிப்பில்:-
தமிழகத்தில் விடுதலைப்புலிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. 3 முகாம்களில் பயிற்சி பெற்ற 150 பேர் இலங்கைக்கு திரும்பியுள்ளனர் என்று கூறப்பட்டிருந்தது. இந்த செய்திக்கு தமிழக போலீஸ் மறுப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக காவல்துறை டி.ஜி.பி. ராமானுஜம் கூறியுள்ளதாவது:-
தமிழகத்தில் இதுபோன்ற பயிற்சி அளிக்கும் பேச்சுக்கே இடமில்லை. இது தொடர்பாக இலங்கை பத்திரிகையில் வெளிவந்துள்ள செய்தி எந்த ஆதரமற்றது. தீவிரவாத அமைப்புகள் தமிழ்நாட்டில் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் தீவிரவாத அமைப்புகளின் நேரடி மற்றும் மறைமுக நடவடிக்கைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
தீவிரவாத அமைப்புகளில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படுபவர்கள் சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர் என கூறினார்.
No comments:
Post a Comment