நடிகை அனன்யாவை, அவரது வீட்டில் பார்க்க சென்ற ஆஞ்சநேயனை விரட்டியடித்துள்ளனர் அனன்யா குடும்பத்தினர். அனன்யாவுக்கும் கேரளாவை சேர்ந்த தொழிலதிபர் ஆஞ்நேயன் என்பவருக்கும் சமீபத்தில் திருமணம் நிச்சயமானது. விரைவில் திருமணம் நடக்க இருந்த நிலையில், ஆஞ்சநேயனுக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டதாகவும், அதை மறைத்து தனது மகளை திருமணம் செய்ய முயன்றதாக அனன்யா அப்பா போலீசில் புகார் கொடுத்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்த போது தனக்கு ஏற்கனவே திருமணமானதை ஆஞ்சநேயன் ஒப்புக்கொண்டார். மேலும் முதல் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்ததாகவும், விவாகரத்து கேட்டு கோர்ட்டில் மனு செய்திருப்பதாகவும், இந்த விஷயம் அனன்யாவுக்கும் தெரியும் என்று ஆஞ்சநேயன் கூறினார். அனன்யாவும் இதனை ஒப்புக்கொண்டார்.
இந்நிலையில் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தும் ஆஞ்சநேயனைத் தான் திருமணம் செய்வேன் என்று உறுதியோடு இருந்த அனன்யா, சமீபத்தில் தனது முடிவை மாற்றிக் கொண்டு மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கிவிட்டார். இதனிடையே ஆஞ்சநேயன், அனன்யாவை சந்திக்க அவரது வீட்டிற்கு போய் உள்ளார். ஆனால் அனன்யா குடும்பத்தார் அவரை பார்க்க விடாமல் விரட்டி அனுப்பிவிட்டனர். இதனால் மனம் நொந்து போய் திரும்பியிருக்கிறார் ஆஞ்சநேயன்.
இதுகுறித்து ஆஞ்சநேயன் கூறுகையில் யாரோ சிலர் சதி செய்து எங்களை பிரித்துவிட்டனர். வேறு ஒன்றும் சொல்வதற்கு இல்லை என்று கூறியுள்ளார்.
அனன்யா கூறுகையில், இந்த விஷயம் பற்றி என்னிடம் எதுவும் கேட்காதீர்கள். நான் இப்போது சூட்டிங்கில் பிஸியாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
அனன்யா-ஆஞ்சநேயன் கூறுவதை பார்த்தால் திருமணம் ரத்தாகிவிட்டதாகவே தெரிகிறது.
No comments:
Post a Comment