ஒரு பெரிய ஹீரோவும், ஒரு வெற்றிப்பட டைரக்டரும் அடிக்கடி சந்தித்தால் என்ன நடக்கும்? ஹ்ம்ம்ம். அதேதான் நடக்கப் போகிறது அஜீத் விஷயத்தில்.
மங்காத்தா படத்தை அடுத்து பில்லா 2 படம்தான் அஜீத்தின் அடுத்த படம். ஆனால், அப்படத்தை துவங்குவதற்கு முன்பாகவே வேறொரு இயக்குனரை அடிக்கடி சந்திக்கிறாராம் அவர். இந்த விஷயம் படு ரகசியமாக வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அந்த ரகசிய பலு£னில் எந்த நேரத்திலும் குண்டூசி விழும் என்பது அவர்களுக்கு தெரியாதல்லவா? அப்படிதான் இந்த சந்திப்பும் டிஸ்கஷனும் வெளியே தெரிய ஆரம்பித்திருக்கிறது.
அஜீத்தை பொருத்தவரை யார் இயக்குனர் என்பதை கடைசிவரை யூகிக்கவே முடியாது. கடைசி நேரத்தில் கூட இவர் வேண்டாம் என்று வேறொருவரை நியமிக்கும் அவசரக்குடுக்கை அவர். இதற்கு முன் பலமுறை இது போன்ற சம்பவங்கள் நடந்திருக்கிறது. பில்லா 2 படத்தையே முதலில் விஷ்ணுவர்த்தன் இயக்குவதாகதான் இருந்தது. சட்டென்று அவரை மாற்றிவிட்டு சக்ரி டோலட்டி என்ற இயக்குனரை முடிவு செய்தவர் அஜீத்.
அந்த வகையில் அஜீத் தற்போது டிஸ்கஸ் செய்து கொண்டிருப்பது யாருடன் தெரியுமா? மதராசப்பட்டினம் விஜய்யுடன். ஏற்கனவே கிரீடம் படத்தின் மூலம் இருவரும் இணைந்து பணியாற்றியிருக்கிறார்கள். அஜீத்தின் மூட் அறிந்து நடக்கக் கூடியவர் விஜய். இந்த ஒரு விஷயம் போதாதா?
தெய்வ திருமகள் படத்தை முழுசாக முடித்துக் கொடுத்துவிட்ட விஜய் தினந்தோறும் அஜீத்தை சந்திக்க வந்துவிடுகிறார். இருவரும் மணிக்கணக்கில் பேசி வருகிறார்கள்.
ஒரு ஆக்ஷன் படம் கொடுத்து தலயை நிமர வைங்க வாத்யாரே...

No comments:
Post a Comment