நெல்லை மாவட்ட கலெக்டராக இருந்தவர் ஜெயராமன். அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு அவர் மாற்றப்பட்டு நடராஜன் கலெக்டராக நியமிக்கப்பட்டார்.
தற்போது அவர் பணியாற்றிய 48 நாட்களுக்கு பின்பு திடீரென மாற்றப்பட்டு புதிய கலெக்டராக செல்வராஜ் நியமிக்கப்பட்டார்.
அதே போன்று நெல்லை சரக போலீஸ் டிஐஜியாக இருந்தவர் சண்முகராஜேஸ்வரன். அவரும் சென்னைக்கு மாற்றப்பட்டு ராமசுப்பிரமணியம் என்பவர் டிஐஜியாக நியமிக்கப்பட்டார்.
ராமசுப்பிரமணி வெளிநாட்டு பயிற்சியை முடித்துக்கொண்டு திரும்பி வந்தவர் கடந்த 18ம் தேதி அன்று காலை பொறுப்பேற்றுக்கொண்டார்.
திடீரென்று அன்றே மாலையே அவர் மாற்றப்பட்டு திருச்சி ஆயுதப்படை முகாமுக்கு மாற்றப்பட்டார். தற்போது வரை அந்த பணி காலியாகவே உள்ளது.
அதிகாரிகள் இது போன்று திடீர் தீடீரென்று பந்தாடப்படுவதால் பொறுப்பேற்கும் அதிகாரிகளும் தங்களின் பதவி எத்தனை நாள் என்கிற மன பதட்டத்திலேயே இருக்கிறார்கள்.
இது மக்கள் வளர்ச்சி பணி திட்டம் முடங்குவதற்கு அடிகோலும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
No comments:
Post a Comment