மதுரை திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் எஸ்ஸார் கோபி நில அபகரிப்பு புகாரில் சிக்கியுள்ளார்.
இவரது வீடு- தோட்டத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மதுரை புறநகர் போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். பல மணி நேரம் நடைபெற்ற சோதனையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் சிக்கின என்று தகவல் தெரிவிக்கின்றன.
மேலும் இந்த சோதனையில் ஒரு கடிதமும் கைப்பற்றப்பட்டுள்ளது என்றூம், மு.க.அழகிரிக்கு எஸ்ஸார் கோபி எழுதியுள்ள அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் அதிர்ச்சிகரான தகவல்கள் கூறப்படுகின்றன.
இந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விஷயங்கள் மற்றும் அதில் தொடர் புடையவர்கள் குறித்தும் தீவிர விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
ஆனால் அழகிரி இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார். ’’எஸ்ஸார்.கோபி எனக்கு எந்த கடிதமும் எழுதவில்லை.
போலீசார் போலியாக ஒரு கடிதத்தை தயார் செய்து அவதூறு பரப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்’’ என்று தெரிவித்தார்.
இந்நிலையில் எஸ்.ஆர். கோபியின் தம்பி போஸ் முத்தையா, ( மதுரை அவனியாபுரம் நகராட்சி தலைவர் உள்ளார்.)இந்த கடித விவகாரம் குறித்து,
’’போலீஸ் தரப்பில் காட்டுவது பொய்க்கடிதம். அப்படி ஒரு கடிதத்தை அன்ணன் எழுதவில்லை. அண்ணன் அரசியல் வாழ்க்கையை அழிக்கப்பார்க்கிறார்கள். இதற்கு போலீஸ் உடந்தையாக இருக்கிறது’’ என்றும் கூறுகிறார்.
மேலும், அந்த போலிக்கடிதத்தை தயாரித்தவர்கள் மீதும், வெளியிட்டவர்கள் மீதும் வழக்கு தொடுப்பேன் தீவிரமாக உள்ளார்.
அவரது வக்கில் ராமசுந்தரம் மூலம் மதுரை நீதிமன்றத்தில் வழக்கு தொடருகிறார்.
No comments:
Post a Comment