தொழிற்சாலைகளுக்காகவும, குடியிருப்புகளுக்காகவும் சதுப்பு நிலங்கள் அழிக்கப்படுவதால் புவி வெப்பமடைந்து வருவதாக மாவட்ட தலைமை வன பாதுகாவலர் மல்லேசப்பா தெரிவித்தார்.
பேட்டை ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி தாவரவியல் துறை சார்பில் சதுப்பு நிலங்கள் குறைந்து வருவதால் அதிகரிக்கும் புவி வெப்பமயமாதல் குறித்த தேசிய கருத்தரங்கு நேற்று நடந்தது. கல்லூரி முதல்வர் ஆஷா தலைமை வகித்தார். தாவரவியல் துறை தலைவர் வியம்பிகா வரவேற்றார்.
மாவட்ட தலைமை வன பாதுகாவலரும், முன்டன்துறை புலிகள் காப்பக கள இயக்குனருமான மல்லேசப்பா கருத்தரங்கை துவங்கி வைத்து பேசியதாவது,
நெல்லை மாவட்டத்தில் 20 ஆண்டுகளுக்கு முன் பசுமை நிறைந்த சதுப்பு நிலங்கள் அதிகமாக காணப்பட்டது. சதுப்பு நில பகுதிகளான குளம், குட்டை, ஆறுகளில் பல வகையான உயிரினங்கள், தாவரங்கள் அதிகளவில் இருந்தன. சாலை ஓரங்களில் குளிர்ச்சி தரும் வகையில் அதிகளவில் மரங்கள் காணப்பட்டன.
தற்போது பெருகி வரும் தொழிற்சாலைகளுக்காகவும், ரியல் எஸ்டேட் தொழிலுக்காகவும் குளங்கள், விளை நிலங்கள் அழிககப்படுகின்றன. சாலைகளை விரிவுபடுத்தும் பணிக்காகவும் ஏராளமான மரங்கள் அழிக்கப்படுகின்றன. இதனால் மழை வளம் குறைகிறது. நீர் நிலைகளில் கழிவு பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள் குப்பைகளை கொட்டுவதால் தண்ணீர் மாசுப்படுகிறது. நீர் நிலைகளில் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுப் பொருட்கள் மண்ணில் மங்கி போகாமல் நிலத்தடி நீரில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
காலநிலை மாற்றத்தால் நீர் நிலைகள் தண்ணீர் இன்றி காணப்படுகின்றன. இதனால் பல ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திலிருந்து நீர் நிலைகளைத் தேடி வரும் பறவைகளின் எண்ணிக்கை குறைந்து வி்ட்டது.
மாணவர்கள் சுற்றுப்புறச் சூழல் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். சதுப்பு நில காடுகள் உள்ள நாடுகளில் சுனாமியின் பாதிப்பு குறைவாக உள்ளது. உயிரினங்களின் வாழ்க்கைக்கு சதுப்பு நிலங்கள் முக்கியமானவையாகும். பெருகி வரும் தொழிற்சாலைகளில் இருந்து வெளிவரும் நச்சுப் புகையால் ஓசோன் படலத்தில் ஓட்டை ஏற்பட்டு புவி வெப்பமடைகிறது. இதனால் பனி மலைகள் உருகிக் கடல் மட்டம் உயருகிறது. இயற்கை வளங்களை பாதுகாக்க கடுமையான சட்டங்கள் உள்ளன. இதை பயன்படுத்தும் போது சில சிக்கல்கள் ஏற்படுகிறது என்றார்.

No comments:
Post a Comment