திருவட்டார் அருகே உள்ள ஆற்றூரைச் சேர்ந்தவர் சியாம்ராஜ் (வயது 33). இவர் கடந்த 8 மாதத்துக்கு முன்பு வியன்னூரைச் சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்தார். அந்த பெண்ணுக்கு உறவுக்கார வாலிபர் ஒருவருடன் ஏற்கனவே காதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
திருமணம் ஆன 10 நாட்களில் உறவுக்கார வாலிபருடன் அந்த பெண் ஓட்டம் பிடித்தார். இதனால் பரிதவிப்புக் குள்ளான சியாம்ராஜ், 2வதாக ஆற்றூரைச் சேர்ந்த ஜெனீபாவை கடந்த ஜூன் 15ந் தேதி திருமணம் செய்தார். ஜெனீபாவும் உறவுக்கார வாலிபர் ஒருவரை காதலித்துள்ளார்.
வெளிநாட்டில் வேலை பார்த்த அந்த வாலிபர் ஊருக்கு வருவதற்கு முன்பு அவசரமாக சியாம்ராஜூக்கு ஜெனீபாவை திருமணம் செய்து வைத்தனர். ஜெனீபாவுக்கு திருமணம் முடிந்து ஒரு மாதத்தை கடந்து இருக்கும் நிலையில் அவர் காதலித்த வாலிபர் வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வந்தார். அந்த வாலிபருடன் ஜெனீபா ஓட்டம் பிடித்தார். சியாம்ராஜ் தான் திருமணம் செய்த 2 பெண்களும் காதலர்களுடன் ஓட்டம் பிடித்ததால் சோகத்தில் இருக்கிறார்.
ஜெனீபா வீட்டில் இருந்து மாயமானது பற்றி அவர் திருவட்டார் போலீசில் புகார் செய்தார். புகாரில் “ஜெனீபா காதலனுடன் ஓடியிருப்பது தெரியவந்துள்ளது. அவர் எனது தங்கைக்குரிய 3 வளையல்களையும், எனது பாஸ்போர்ட்டையும் எடுத்துச் சென்றுள்ளார். ஜெனீபாவை கண்டுபிடித்து என்னிடம் ஒப்படையுங்கள். அவரை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன் என கூறியுள்ளார்.
No comments:
Post a Comment