சென்னையில் அறக்கட்டளைக்குச் சொந்தமான ரூ. 200 கோடி நிலத்தை முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதியின் உதவியாளர் போலி பட்டா மூலம் அபகரித்து விட்டதாக போலீஸ் கமிஷனரிடம் புகார் தரப்பட்டுள்ளது.
இந்த நிலத்தை பின்னர் திமுக தலைவர் கருணாநிதியின் பேரனும், மு.க.ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலினின் பினாமி நிறுவனத்திற்கு மாற்றி விட்டதாகவும், இந்த மோசடியில் அப்போது முதல்வராக இருந்த கருணாநிதியும் உடந்தை என்றும் புகாரில் கூறப்பட்டுள்ளதால் பரபரப்பு அதிகரித்துள்ளது. இதனால் கருணாநிதி மீது வழக்கு தொடரப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதுகுறித்து சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த தர்மதோப்பு அறக்கட்டளையின் அறங்காவலர் ரெங்காரெட்டி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது:
எங்கள் அறக்கட்டளைக்கு ஏழரை ஏக்கர் நிலம் இருந்தது. இந்த நிலத்தை அப்போதைய அமைச்சர் பரிதி இளம்வழுதியின் உதவியாளர் ககாரி என்பவர் போலி பத்திரம் தயாரித்து, பெரம்பலூர் புரசைவாக்கம் தாசில்தார் அலுவலகத்தில் போலி பட்டா பெற்று இந்த நிலத்தை விலைக்கு வாங்கியது போல பத்திரம் தயாரித்தனர்.
இது அறக்கட்டளையின் நிலம். தனிப்பட்ட யாரும் இதை விற்கவோ, வேறு யாரும் வாங்கவோ முடியாது. அப்படியிருக்கும் போது தனி நபர் ஒருவரிடமிருந்து ஐந்தரை கோடி ரூபாய்க்கு இந்த நிலத்தை வாங்கியதாக பத்திரம் தயாரிக்கப்பட்டுள்ளது. உண்மையில் இதன் மதிப்பு ரூ.200 கோடியாகும்.
இந்த போலி பத்திரம் தயாரிக்க தாசில்தார் மற்றும் துணை தாசில்தார் ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர். இந்த பத்திரத்தில் அப்போதைய அமைச்சர் பரிதிஇளம்வழுதி, மாவட்ட திமுக பிரதிநிதி சிப்கோ வாசு, முன்னாள் திமுக பகுதி செயலாளர் சிட்டிபாபு ஆகியோர் சாட்சி கையெழுத்து போட்டுள்ளனர்.
புகார் கொடுத்து விட்டு வந்ததும் கடத்தி மிரட்டினர்
இந்த நிலத்தை ஜோஷி பில்டர்ஸ் என்ற நிறுவனத்துக்கு விற்றதாக கூறப்படுகிறது. இது கருணாநிதியின் பேரன் உதயநிதி ஸ்டாலினின் பினாமி நிறுவனம் என்று கூறப்படு கிறது. இது குறித்து 2010ம் ஆண்டே போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தோம். புகார் கொடுத்து விட்டு வெளியே வந்த போது எங்களை கடத்திச் சென்று சிட்டிபாபுவின் வீட்டில் வைத்து மிரட்டினார்கள். இதில் தலையிடக்கூடாது. தலையிட்டால் விபரீதம் ஏற்படும் என்று எச்சரித்தனர். இதனால் பயந்துபோய் புகாரை வலியுறுத்தவில்லை. மேலும் அறங்காவலர் வீடுகள் மீது ரவுடிகள் தாக்குதல் நடத்தி மிரட்டினார்கள்.
நிலம் கருணாநிதி குடும்பத்திற்குப் போய் விட்டது
மேலும் இந்த சொத்து கருணாநிதியின் குடும்பத்திற்குத்தான் சென்றுள்ளது. முதல்வர் உதவி இல்லாமல் இவ்வளவு பெரிய மோசடி நடந்திருக்க முடியாது. மேலும் தாசில்தார், துணை தாசில்தார் ஆகியோருக்கு பெருந்தொகையை கொடுத்துவிட்டு இந்த மோசடியை செய்துள்ளனர்.
தற்போது அந்த நிலத்தை சுற்றி காம்பவுண்டு போடப்பட்டு, அடுக்கு மாடி குடியிருப்பு கட்ட திட்டமிடப் பட்டுள்ளது. எனவே இதனை தடுத்து நிலத்தை மீண்டும் அறக்கட்டளைக்கு கிடைக்க செய்ய வேண்டும். அத்துடன் இந்த மோசடியில் ஈடுபட்ட பரிதி இளம்வழுதியின் உதவியாளர் ககாரி, பரிதிஇளம்வழுதி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
புகாரில் பரிதி உள்ளிட்டோரின் பெயர்களை மட்டுமே அவர் குற்றம் சாட்டியுள்ளார். கருணாநிதி உடந்தையாக இருந்ததாக கூறியுள்ளார். இருப்பினும் கருணாநிதி மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்வார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

No comments:
Post a Comment