மதுரையில் மத்திய அமைச்சர் மு.க. அழகிரிக்கு சொந்தமான தயா டிவி மற்றும் ராயல் கேபிள் விஷன் அலுவலகத்தில் மதுரை கமிஷ்னர் கண்ணப்பன் உத்தரவில் (4.8.2011) இரவு 9 மணிக்கு போலீசார் அதிரடி சோதனையை தொடங்கியுள்ளனர்.
மு.க.அழகிரி தற்போது டெல்லியில் இருக்கும் சமயத்தில் இந்த சோதனை நடைபெறுவதால், அவரது ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்கலாம் என்பதால் சோதனை நடைபெறும் அலுவலகத்தை சுற்றி ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
திருநெல்வேலியில் சன் டிவிக்கு சொந்தமான கரண் டிவி அலுவலகம் மற்றும் சுமங்கலி கேபிள் விசன் நிறுவனத்தில் போலீஸ் துணை கமிஷனர் மார்ஸ்டன் லியோ மற்றும் தாசில்தார் கொண்ட குழு சோதனை நடத்தி வருகிறது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment