நடிகர் ரஜினியின் மூத்த மகளும், நடிகர் தனுசின் மனைவியுமான ஐஸ்வர்யா முதன்முதலாக ஒரு படத்தை டைரக்டு செய்கிறார். இந்த படத்துக்கு, 3' என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. தனுஷ் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அமலாபால் நடிக்கிறார். படத்தின் அறிமுக கூட்டம் சென்னை தியாகராயநகரில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நடந்தது.
அப்போது தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தனர்.
கேள்வி: உங்கள் மனைவி ஐஸ்வர்யா ஒரு டைரக்டராக விரட்டி வேலை வாங்குகிறாரா, அன்பாக வேலை வாங்குகிறாரா?
பதில்: விரட்டியும் வேலை வாங்குகிறார். அன்பாகவும் வேலை வாங்குகிறார். நான் மற்ற டைரக்டர்களின் படங்களில் எப்படி வேலை செய்கிறேனோ, அப்படியே இந்த படத்திலும் வேலை செய்கிறேன்.
கேள்வி (ஐஸ்வர்யாவிடம்): உங்களுக்கு தனுஷ் உதவியாக இருக்கிறாரா?
பதில்: படப்பிடிப்பு தளத்தில் அவர் நடிகர். நான் டைரக்டர். என் வேலையில் அவர் தலையிடுவதில்லை. வீட்டில் எனக்கு உதவியாக இருக்கிறார். குழந்தைகளை பார்த்துக்கொள்வதில் எனக்கு ரொம்ப உதவியாக இருக்கிறார்.
கேள்வி: இந்த படத்தின் கதை தனுசுக்காக எழுதப்பட்டதா?
பதில்: எங்க வீட்டில் இரண்டு நடிகர்கள் இருக்கிறார்கள். கதை எழுதும்போது இரண்டு பேருமே நினைவுக்கு வருவார்கள். இந்த கதையை பொறுத்தவரை தனுசை மனதில் வைத்து எழுதப்பட்டதுதான்.
கேள்வி: இந்த படத்தில் தனுசுடன் ரஜினிகாந்த் இணைந்து நடிக்க வாய்ப்பு இருக்கிறதா?
பதில்: இல்லை. அப்பாவிடம் நான் இதுபற்றி கேட்கவில்லை.
கேள்வி: டைரக்டு செய்வது சிரமமாக இருக்கிறதா, சுலபமாக இருக்கிறதா?
பதில்: டைரக்டு செய்வது சுலபம் இல்லை. நிறைய பொறுப்புகளை தோளில் சுமக்க வேண்டியிருக்கிறது.
கேள்வி: டைரக்ஷனில், உங்களுக்கு குரு யார்?
பதில்: செல்வராகவன்தான் என் குரு.
கேள்வி (தனுசிடம்): சமீபத்தில் விரதம் இருந்து சபரிமலை சென்றீர்களே... என்ன வேண்டுதல்?
பதில்: வேண்டுதலை வெளியில் சொல்லக்கூடாது.''
இவ்வாறு தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் பதில் அளித்தார்கள்.
No comments:
Post a Comment