நில அபகரிப்பு வழக்குகளில் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள தி.மு.க. நிர்வாகிகளை பார்ப்பதற்காக மத்திய மந்திரி மு.க.அழகிரி நேற்று மாலை 3.35 மணி அளவில் மத்திய சிறைக்கு வந்தார். அவரது காரை சிறை வளாகத்துக்குள் அனுமதிக்கவில்லை.
இதனால் அவர் மெயின் ரோட்டிலேயே காரை நிறுத்திவிட்டு உள்ளே நடந்து சென்றார். அவருடன் மத்திய இணை மந்திரி நெப்போலியன், முன்னாள் மாவட்ட செயலாளர் வேலுச்சாமி, வக்கீல்கள் மோகன்குமார், லிங்கத்துரை ஆகியோர் சென்றனர்.
சிறைக்குள் ஜெயிலர் அறையில் மாநகராட்சி வடக்கு மண்டல தலைவர் இசக்கிமுத்து, மின்னல்கொடி, எஸ்ஸார் கோபியின் தம்பி ஈஸ்வரன், கவுன்சிலர் மலைச்சாமி, டாக்டர் நவநீதகிருஷ்ணன் திண்டுக்கல் விஜயன் ஆகியோரை மு.க.அழகிரி சந்தித்து நலம் விசாரித்தார். பிறகு 3.55 மணிக்கு அவர் வெளியே வந்தார்.
அப்போது மத்திய மந்திரி மு.க.அழகிரி நிருபர்களிடம் கூறும்போது, ``எங்கள் கட்சியினர் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது. இதை தைரியமாக சந்திப்போம். தி.மு.க.வினர் மீது பொய் வழக்கு போட்டவர்கள் மீது சட்டப்படி வழக்கு தொடருவோம்'' என்றார்.
No comments:
Post a Comment