தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் இளைய மகன் சண்முகப் பாண்டியனை இயக்கப் போவது பூபதி பாண்டியன் அல்ல என்று கூறப்படுகிறது.
தேமுதிக தலைவர் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் விரைவில் தந்தை வழியில் கதாநாயகனாகவிருக்கிறார். இதற்காக விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா மற்றும் மைத்துனன் சுதீஷ் ஆகியோர் கதை கேட்டு வருகின்றனர்.
அவரிடம் இயக்குநர் பூபதி பாண்டியன் ஒரு அதிரடி ஆக்ஷன் மற்றும் காமெடிக் கதையை சொன்னாராம். கதை பிடித்திருந்தபோதிலும் காமெடி டிராக்கில் யாரைப் போடுவது என்பதில் பெரும் குழப்பமாகி விட்டதாம்.
மேலும் இப்போதே அதிரடிக் கதையில் சண்முகப் பாண்டியனை இறக்க கேப்டன் தரப்பு சற்றே தயங்குகிறதாம். அறிமுகமாகும் படம் அருமையாக அமைய வேண்டும் என்பதில் கவனமாக இருக்கின்றனர். இதனால் பூபதி பாண்டியன் கதையை தற்போதைக்கு நிறுத்தி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் சிலரிடமும் கதை கேட்ட பின்னர் முடிவுக்கு வரத் திட்டமிட்டுள்ளனராம்.

No comments:
Post a Comment