தமிழகத்தின் கடந்த ஆட்சியின் போது சினிமாவிலும் அரசியல் கலந்துவிட்டது, அதனால் தான் முக்கிய நடிகர்களை சில படங்களில் நடித்தாக வேண்டும் என்று மிரட்டுகிறார்கள் என்றெல்லாம் செய்திகள் வெளியானது. அஜீத்தும் மங்காத்தா படத்தில் நடிக்க மிரட்டப்பட்டார், கட்டாயப் படுத்தப்பட்டார் என்றார்கள்.
ஆனால் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் இந்த செய்திகளை சப்பென்று ஆக்கியது வெங்கட் பிரபு சொன்ன விஷயம், முதலில் இந்த கதையில் அஜீத் சார் நடிப்பதாகவே இல்லை. சத்யராஜ் மற்றும் சிலரை வைத்துக் கொண்டு சின்ன பட்ஜெட்டில் படத்தை முடித்துவிடலாம் என்று நினைத்திருந்தேன். க்ளவுட் நைன் சுஷாந்த்திடம் கதையை சொல்லி படம் இயக்க சம்மதம் வாங்கியாகிவிட்டது. தயாரிப்பாளர் துரை தயாநிதியிடம் அனுமதி வாங்கி பம்பாய் சென்று லொகேஷனும் முடிவானது. அந்த நேரத்தில் தான் அஜீத் சாரிடம் இருந்து போன் வந்தது. அப்போது அவர், நல்லா படம் பண்றீங்க! என்று வாழ்த்தினார். இப்போ மங்காத்தா படம் பண்றீங்களா என்றார். ஆமாம் என்றேன்.
’டார்க் நைட்’ படத்தில் கீத் ஃப்லெச்சர் பண்ண வில்லன் கேரக்டர் மாதிரி எதனா இருந்தா சொல்லுங்க, நம்ம சேர்ந்து படம் பண்ணலாம் என்றார். உடனே நான் அமைதியாகிவிட்டேன். என்ன சைலண்ட் ஆகிட்டீங்க என்றார். இல்ல சார் மங்காத்தா படத்திலேயே அப்படி ஒரு கேரக்டர் இருக்கு என்றேன். நம்ம பசங்க எல்லாம் சேர்ந்து பண்ணலாம்ன்னு ஐடியா இருக்கு என்றேன். என்ன கேரக்டர் என்று கேட்டார். அந்த கேரக்டரின் லைனை சொன்னென். உடனே நான் நடிக்கிறேன் என்றார். படத்தில் நிறைய நடிகர்கள் இருக்கிறார்கள் என்று சொல்லியும் நான் நடிக்கிறேன் என்று சொன்ன அஜீத் சாருக்கு பெரிய மனசு, அப்படிதான் இந்த மங்காத்தா அமைந்தது என்றார் வெங்கட்.
இது அஜீத்தோட 50வது படமாக அமைந்துவிட்டது. அதனால் படத்தில் எத்தனை பேர் இருந்தாலும் அஜீத் சாருக்கு தான் முக்கியத்துவம், ஆனால் அதை ஏற்றுக்கொண்டு நடிக்க சம்மதித்தார் அர்ஜுன் சார். அவருக்கு நன்றி. இது கெட்டவங்களோட கதை என்றும் தெரிவித்துக் கொண்டார் வெங்கட் பிரபு.
படத்தில் இரண்டு பாடல்கள் காட்டப்பட்டது. யுவனின் அதிரடி இசைக்கு அஜீத் நடனம் சூப்பர். அதுவும் ’ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலை இல்ல... ’ என்று ரஜினி பாட்டு பாடும் போது திரையரங்கம் அதிரப்போவது உறுதி.

No comments:
Post a Comment