'வெடி' படத்தை அடுத்து 'தீராத விளையாட்டு பிள்ளை' இயக்குனர் திரு இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் விஷால். இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிக்க சம்மதம் தெரிவித்து இருக்கிறார் த்ரிஷா.
இப்படத்தில் வில்லனாக நடிக்க நீண்ட நாட்களுக்கு பிறகு சம்மதம் தெரிவித்து இருக்கிறார் நடிகர் அரவிந்த்சாமி.
'தளபதி' படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அரவிந்த்சாமியை அறிமுகப்படுத்தினார் இயக்குனர் மணிரத்னம். 'ரோஜா' படத்தின் மூலம் இந்திய அளவில் அறியப்பட்டார். அதன் பிறகு பல படங்களில் நடிக்க அவரை அணுகினாலும் அவருக்கு கதை பிடித்தால் மட்டுமே கால்ஷீட் கொடுப்பாராம். இதனால் தேர்ந்தெடுக்கப்பட்ட சில படங்களில் மட்டுமே அவர் நடித்தார்.
பின்னர் தனது வியாபாரத்தில் பிஸியாகிவிட்ட அர்விந்த்சாமி, மணிரத்னத்தின் 'அலைபாயுதே' படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தார்.
அதன் பிறகும், பலர் அவரை நடிக்க கேட்டு அணுக, கதை பிடித்திருந்தால் மட்டுமே நடிப்பேன் என்று தவிர்த்து வந்தார்.
இந்நிலையில், விஷால், இயக்குனர் திரு என இருவரும் சொன்ன கதையை கேட்டு மிகவும் சந்தோஷப்பட்டவர் எப்போது உங்களுக்கு தேதிகள் வேண்டும் என்று கேட்டு நடிக்க சம்மதித்தார்.
விஷால் - த்ரிஷா என்ற புதிய ஜோடியுடன், இதுவரை நல்ல நாயகனாக மட்டுமே நடித்து வந்த அரவிந்த்சாமி வில்லனாக நடிக்க இருப்பது தான் தற்போதைய தமிழ் திரையுலகத்தின் பேச்சு.
No comments:
Post a Comment